<p>வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் மாயமாகியதாக கூறப்படும் நிலையில் உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p>
<p>இந்த நிலையில், வயநாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி வரும் நிலையில், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அவர் கௌரவ கர்ணலாக இருக்கும் சூழலில், ராணுவ சீருடையிலே மோகன்லால் சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், வயநாட்டில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் நல்வாழ்விற்காக ரூபாய் 3 கோடி நிதி உதவி அளிப்பதாக கூறினார்.</p>