Watch Video: விஜய் பட ஹீரோயினை மேடையிலே தள்ளிவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் - நீங்களே பாருங்க

1 year ago 7
ARTICLE AD

தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் வெங்கடேஷ். ராம்சரண், அல்லு அர்ஜூன் என ஏராளமான இளம் ஹீரோக்கள் உலா வந்தாலும் வெங்கடேஷ் இன்னும் இளம் ஹீரோக்களுக்கு சவால் அளிக்கும் விதமாக நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் வெங்கடேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் சங்கராந்திகி வஸ்துனம். இந்த படம் தெலுங்கு மக்களின் முக்கிய நிகழ்வான சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக அடுத்தாண்டு ஜனவரி மாதம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது போல தெலுங்கு மக்கள் சங்கராந்தியை கொண்டாடுகின்றனர்.

அடுத்தாண்டு ஜனவர 14ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் வெங்கடேஷ், படத்தின் நாயகிகளான ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்ரி ஆகியோர் பங்கேற்றனர். மீனாட்சி சௌத்ரி விஜய் சமீபத்தில் நடித்த கோட் படத்தின் நாயகியாக நடித்திருந்தவர்.

😂😂🔥 pic.twitter.com/H2wPXioNpc
— Let's X OTT GLOBAL (@LetsXOtt) November 20, 2024

படத்தில் மீனாட்சி சௌத்ரி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இதனால், இந்த நிகழ்ச்சியிலும் காவல்துறை அதிகாரி வேடத்திலே பங்கேற்றார். அப்போது, வெங்கடேஷூம் மீனாட்சி சௌத்ரியும் மேடையில் நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். அப்போது, இவர்கள் பின்னால் உட்கார்ந்திருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்கும் இடையில் உள்ளே புகுந்து மீனாட்சி சௌத்ரியை தள்ளவிட்டு வெங்கடேஷூடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார். மீனாட்சி சௌத்ரியும் சிரித்துக் கொண்டே விலகிவிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெங்கடேஷின் மனைவியாகவும், மீனாட்சி சௌத்ரி வெங்கடேஷின் முன்னாள் காதலியாகவும் பங்கேற்கின்றனர். இந்த படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். படத்தை ஸ்ரீரிஷ் மற்றும் தில் ராஜூ தயாரிக்கின்றனர்.

Read Entire Article