ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

டி20 உலகக் கோப்பை:

ஐசிசி டி20 உலகக் கோப்பை ஜூன் 1 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்க உள்ளது. அதன்படி 20 நாடுகள் இந்த போட்டிகளில் விளையாட உள்ளன. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகள் தான் இந்த முறை ஐசிசி டி20 உலகக் கோப்பையை நடத்துகிறது.

டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்னரே ரோகித் சர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி அமெரிக்காவிற்கு சென்றுவிட்டது. அதன்படி கடந்த சில நாட்களாக தொடர் பயிற்சியையும் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஹர்திக் பாண்டியா அமெரிக்கா சென்ற நிலையில் இன்று இரவு மும்பையில் இருந்து புறப்பட்டிருக்கிறார் விராட் கோலி.

அதேநேரம் உலகின் நம்பர் 1 டி20 அணியாக இருக்கும் இந்திய அணி கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு ஐசிசி கோப்பைகளையும் வெல்லவில்லை. இறுதிப்போட்டி வரை சென்று கடைசியில் தோல்வி அடைவது இந்திய கிரிகெட் ரசிகர்களுக்கு வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. அதேநேரம் இந்த டி20 உலகக் கோப்பையிலாவது இந்திய கிரிக்கெட் அணி வெல்ல வேண்டும் என்பது தான் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.

வைரல் வீடியோ:

Team India spotted in New York. Wait for Rohit Sharma’s sprint. 😂 pic.twitter.com/QlfPlSSLAW

— Vipin Tiwari (@Vipintiwari952_) May 29, 2024

இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த சில நாட்களாகவே அமெரிக்காவில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனிடையே பயிற்சியை முடித்துவிட்டு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் நியூயார்க் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளனர்.

உள்ளே சென்று விட்டு வெளியே வரும் போது மழை பெய்திருக்கிறது. மழை நின்று விடும் என்று எதிர்பார்த்து இருவரும் கத்திருக்க மழை நிற்காததால் வேகமாக தங்களது காரை நோக்கி ஓடும் வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் நகைச்சுவையான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

மேலும் படிக்க: Sunil Narine: எனது காதலியை அழைத்து வரலாமா? சுனில் நரைன் கேட்ட கேள்வி! கம்பீர் கொடுத்த ரியாக்சன்!