சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று பிப்ரவரி 17 ஆம் தேதி தனது 40 ஆவது வயதை எட்டினார். ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை அவருக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துக்கள் குவிந்தன. விஜய் தொலைக்காட்சியில் மிமிக்ரி கலைஞனாக தொடங்கி இன்று கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். காமெடியன் , சப்போர்டிங் ரோல் என தனது கரியரில் பல சவால்களையும் அவமானங்களையும் எதிர்கொண்டு இவ்வளவு பெரிய நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன். கவின் , ரியோ என பல இளம் நடிகர்கள் அவரது பாதையில் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு இன்று பயணித்து வருகிறார்கள்.

அமரன் படத்திற்கு சிவகார்த்திகேயன் பயிற்சி

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் கடந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது. ராஜ்கமல் தயாரித்த இந்த படம் இதுவரை 350 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமரன் படத்தின் 100 ஆவது நாளை சமீபத்தில் படக்குழு கோலாகலமாக கொண்டாடியது. இந்த நிகழ்வில் பேசிய கமல்ஹாசன் இந்த படத்திற்கு சிவகார்த்திகேயன் கடும் பயிற்சி எடுத்த்க் கொண்டதை பாராட்டினார். தற்போது சமூக வலைதளம் முழுவதும் சிவகார்த்திகேயன் பயிற்சி செய்யும் வீடியோக்கள் நிறைந்து கிடக்கின்றன.

Cutest video on internet#Sivakarthikeyan pic.twitter.com/J0vRu58A2p

— Tamil Film Update (@tweettamilfilm) February 18, 2025

வலிதாங்க முடியாமல் சிவகார்த்திகேயன் தரையில் படுத்துக் கொள்வது. தனது மகளை சுமந்து புஷ் அப் எடுப்பது . ஐஸ் பக்கெட்டில் குளியல் என அமரன் படத்திற்காக பல போராட்டங்களை எதிர்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். வாரணம் ஆயிரம் படத்திற்கு பின் இளைஞர்களை அதிகம் கவர்ந்த உடற்பயிற்சி தொடர்பான வீடியோ என இந்த வீடியோக்களை குறிப்பிடலாம்