VS Babu TVK: மு.க.ஸ்டாலினுக்கு எதிராக போட்டி! திமுக டூ தவெக.. யார் இந்த விஎஸ் பாபு?

2 weeks ago 3
ARTICLE AD

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இன்று முதல் ஒவ்வொரு கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக விஎஸ் பாபு:

நட்சத்திர தொகுதிகளில் முதன்மையானதாக கொளத்தூர் உள்ளது. கொளத்தூர் தொகுதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டையாக உள்ளது. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் சந்தான கிருஷ்ணன் வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில், தவெக சார்பில் விஎஸ் பாபு போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

வி.எஸ்.பாபு விஜய்யின் ரசிகர்களைப்போல ஆரம்ப காலம் முதலே விஜய்யின் ரசிகராக பணியாற்றியவர் இல்லை. இவர் தனது தொடக்க காலத்தில் திமுக-வில் இருந்தவர். திமுக- சார்பில் கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 7 ஆயிரத்து 363 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வெங்கடேஷ்பாபு 82 ஆயிரத்து 777 வாக்குகள் பெற, விஎஸ் பாபு 90 ஆயிரத்து 140 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திமுக டூ தவெக:

அதன்பின்னர், 2011ம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக போட்டியிட்டார். அந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றாலும் அவருக்கு அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி கடும் சவால் அளித்தார். அந்த தேர்தலில் திமுக பொறுப்பாளராக இருந்த விஎஸ் பாபு முறையாக  தொகுதியில் தேர்தல் பணிகளை கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு காரணமாக கட்சியினருக்கும், அவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது.

பின்னர், திமுக-வில் இருந்து விலகி அதிமுக-வில் இணைந்தார். திமுக-வில் வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்த அவர், அதிமுக-விலும் மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்தார். எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து மோதலைத் தொடர்ந்து அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. பின்னர், அவர் கடந்த பிப்ரவரியில் விஜய் முன்பு தவெக-வில் இணைந்தார்.

ஒரே மாதத்தில் எம்எல்ஏ சீட்:

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஒரு மாதத்திலே அவருக்கு கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் 3 முறை வெற்றி பெற்ற தொகுதியும், அவர் முதலமைச்சராக தேர்வான தொகுதியுமான கொளத்தூரில் மு.க.ஸ்டாலினை வீழ்த்துவது என்பது மிகவும் சவாலான ஒன்றாகும்.

இளைஞர்கள் ஆதரவு, முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆதரவுடன் களமிறங்கியுள்ள விஜய்யின் வேட்பாளரான வி.எஸ்.பாபு வெற்றி பெறுவாரா? என்பது மிகப்பெரிய சவால் ஆகும். மே 4ம் தேதி அதற்கான பதில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியில் சேர்ந்த ஒரே மாதத்தில் அவருக்கு எம்எல்ஏ வாய்ப்பு வழங்கப்பட்டது பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கினாலும், சவாலான தொகுதி என்பதால் கட்சியினரும் பெரியளவு அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.

Read Entire Article