Vote Percentage 2026: எம்ஜிஆரின் வரலாற்றை முறியடித்த விஜய்! முதல் தேர்தலிலே இத்தனை சதவீதமா?

1 month ago 5
ARTICLE AD

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 110 தொகுதிகள் வரை முன்னிலை பெற்றுள்ள நிலையில், தவெக தலைமையிலான ஆட்சியே அமைய உள்ளது.

எம்ஜிஆரை முந்திய விஜய்:

இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்கு சதவீதம் எவ்வளவு இருக்கும்? என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகம் 34.89 சதவீதம் வாக்குகளைப் பெற்று பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

1977ம் ஆண்டு முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் எதிர்கொண்ட எம்ஜிஆர் 144 தொகுதிகளில் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் எம்ஜிஆர் 33.52 சதவீதம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.  எம்ஜிஆரின் இந்த சாதனையை 49 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் முறியடித்துள்ளார்.

வாக்கு சதவீதம் என்ன?

இந்த தேர்தலில் ஒவ்வொரு கட்சியினரும் பெற்றுள்ள வாக்குகள் எண்ணிக்கை எவ்வளவு? என்பதை கீழே காணலாம்.

1. தவெக - 34.89 சதவீதம்

2. திமுக - 24.19 சதவீதம்

3. அதிமுக - 21.35 சதவீதம்

4. நாம் தமிழர் - 3.99 சதவீதம்

5. தேமுதிக - 1.14 சதவீதம்

6. பாஜக - 2.99 சதவீதம்

7. காங்கிரஸ் - 3.39 சதவீதம்

8. இந்திய கம்யூனிஸ்ட் - 0.65 சதவீதம்

9. மார்க்சிஸ்ட் - 0.63 சதவீதம்

10. விசிக - 1.11 சதவீதம்

11. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 0.28 சதவீதம்

12. பகுஜன் சமாஜ்வாதி - 0.11 சதவீதம்

13.மற்றவர்கள் - 4.83 சதவீதம்

இந்த தேர்தலில் 234 தொகுதிகளில் எடப்பாடி தொகுதி தவிர எஞ்சிய 233 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டது. விஜய் என்ற ஒரே முகத்திற்காக மட்டும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்குகள் குவிந்துள்ளது. ஆளுங்கட்சியான திமுக-வின் முக்கிய அமைச்சர்கள், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் தோல்வி அடைந்துள்ளனர். முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.

முதன்முறையாக தேர்தல் களத்தை எதிர்கொண்டுள்ள விஜய் தன்னுடைய ரசிகர்கள் பலத்தை நம்பி மட்டுமே களமிறங்கியுள்ளார் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால், அவர் கீழ்மட்ட அளவில் தனது கட்சியை வலுப்படுத்த கடந்த 2 ஆண்டுகளை எடுத்துக்கொண்டார். தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் 1.68 கோடி வாக்குகளைப் பெற்று அசத்தியுள்ளது.

அரசியல் கட்சி தொடங்கிய நடிகரில் இந்தியாவிலே அதிக வாக்கு சதவீதம் பெற்றவர் என்ற பெருமையை என்டிஆர் தன்வசம் வைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் தற்போது தவெக தலைவர் விஜய் இடம்பிடித்துள்ளார்.

Tamil Nadu Election Results 2026 LIVE: தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து

Read Entire Article