Vishal 35: விஷால் நடிக்கும் படத்தின் டைட்டில் இதானா.. டீசர் மிரட்டலா இருக்கே!

3 months ago 4
ARTICLE AD
<p>மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு நடிகர் விஷால் இயக்குநர் ரவி அரசு இயக்கும் புதிய படத்தில் நடிக்க &nbsp;கமிட் ஆகியுள்ளார். இப்படத்தை தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் விஷாலுக்கு மார்க் ஆண்டனி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. அதனோடு 100 கோடி கிளப்பிலும் இணைந்து மாஸ் காட்டியது. இப்படத்திற்கு மற்றொரு பிளஸ் ஆக இருந்தது ஜி.வி.பிரகாஷின் இசை. &nbsp;</p> <p>இந்நிலையில் மீண்டும் விஷால் ஜிவி பிரகாஷ் கூட்டணியில் தான் தற்போது படம் உருவாகியிருக்கிறது. அந்தப் படத்திற்கு மகுடம் என்று பெயர் சூட்டியுள்ளனர். விஷாலின் 35ஆவது படமாக இது இருக்கிறது.<br />இப்படம் கப்பல் மற்றும் துறைமுகத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் கதைக்களமாகும் என்று சொல்லப்படுகிறது. துஷாரா விஜயன் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். இவர்களுடன் அஞ்சலியும் முக்கியமான கேரக்டரில் நடிப்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. மதகஜராஜா படத்திற்கு பிறகு விஷாலும் அஞ்சலியும் இணைந்து இப்படத்தில் நடிக்கின்றனர்.&nbsp;</p> <p>இப்படத்திற்கான பூஜை கடந்த மாதம் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், இப்படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. விஷால் 35 படத்திற்காக உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் விஷால் மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிட்டார் என்றும் தெரிவித்தனர். இந்நிலையில், விஷால் படங்களில் நடித்து வந்தாலும் ஒரு பக்கம் திருமண ஏற்பாடும் தடபுடலாக நடந்து வருகிறது. மற்றொரு பக்கம் நடிகர் சங்கத்திற்கான கட்டடம் முடியும் தருவாயில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p>
Read Entire Article