Virat Kohli: என்னது! விளையாட்ட மாட்டாரா விராட்? கோலி ரசிகர்களுக்கு ஜாலி நியூஸ் வருமா?

2 days ago 1
ARTICLE AD

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் ஆர்சிபி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றனர். பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடக்கும் இந்த போட்டி வழக்கம்போல இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

ஆர்சிபி - லக்னோ மோதல்:

இரு அணிகளும் கடந்த போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் களமிறங்குகின்றனர். இந்த தொடரில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வரும் ஆர்சிபி அணி இந்த போட்டியிலும் முழு பலத்துடன் களமிறங்க ஆர்வம் காட்டி வருகிறது. அதேபோல, இந்த தொடரில் வெற்றி தோல்வி என கலவையாக ஆடி வரும் லக்னோவும் சிறப்பாக ஆடும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.

விராட் கோலி விளையாடுவாரா? இல்லையா?

மும்பை அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக ஆர்சிபி பந்துவீச்சின்போது ஃபீல்டிங் செய்யவில்லை. இதனால், இன்றைய போட்டியில் அவர் விளையாடுவாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெங்களூர் மைதானத்தில் விராட் கோலி வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. ஆனாலும், ஆர்சிபி அணி தரப்பில் இருந்து அவர் விளையாடுவார் அல்லது விளையாடமாட்டார் என்ற எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

விராட் கோலி முழு உடற்தகுதி எட்டினால் மட்டுமே அவர் இன்றைய போட்டியில் ஆடுவார். இது லீக் போட்டிகள் என்பதாலும் ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் நல்ல நிலையில் இருப்பதாலும் அணி நிர்வாகம் தேவையில்லாத சிரமத்தை மேற்கொள்ளாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்று வீரர் யார்?

ஒருவேளை விராட் கோலி இந்த போட்டியில் விளையாடாவிட்டால் அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் ஆட்டத்தை தொடங்குவார் என்று கருதப்படுகிறது. அவ்வாறு விராட் கோலி விளையாடாவில்லை என்றால் ஆடும் அணியில் வெங்கடேஷ் ஐயர் களமிறங்குவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளது. இல்லாவிட்டால் விராட் கோலி இம்பேக்ட் வீரராக களமிறங்குவதற்கும் வாய்ப்புகள் அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது.

விராட் கோலி இந்த தொடரில் ஆர்சிபி அணிக்காக நிலையான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். கடந்த போட்டியிலும் அவர் அரைசதம் விளாசியிருந்தார். விராட் கோலி இந்த போட்டியில் ஆடாத சூழல் ஏற்பட்டால் நீண்ட இடைவெளிக்கு பிறகு விராட் கோலி ஐபிஎல் தொடரில் ஆடாத சூழல் உண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலி - பில் சால்ட் ஜோடி ஆர்சிபி அணிக்கு நல்ல தொடக்க ஜோடியாக வலு சேர்த்து வருகிறது. கடந்த சீசனில் ஆர்சிபி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையையும் வென்றதற்கு இந்த தொடக்க ஜோடியின் பங்களிப்பு அபாரமானது  என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read Entire Article