Viral Video: இடிந்து விழுந்த தடுப்புச் சுவர்! நூலிழையில் தப்பிய பயணிகள் ரயில்.. திக் திக் வீடியோ

4 months ago 5
ARTICLE AD

இமாச்சல பிரதேசத்தில் ஆற்றுப்பாலத்தில் பயணிகள் ரயில் சென்று கொண்டு இருந்து போது பாலத்தின் தடுப்புச்சுவர் இடிந்து விழும் சம்பவத்தின் பரபரப்பு காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

ஹிமாச்சலில் வெளுத்து வாங்கும் மழை:

வடமாநிலங்களில் பருவமழையானது தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் கனமழையானது பெய்து வருகிறது. குறிப்பாக ஹிமாச்சல பிரதேசத்தில் மழையானது கொட்டித்தீர்த்தது.இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பேருக்கு மற்றும் மண்சரிவானது ஏற்ப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இடிந்து விழுந்த பாலத்தின் சுவர்:

டங்கு என்கிற இடத்தில் பஞ்சாப்-ஜம்முவை இணைக்கு ரயில் பாதையானது உள்ளது. இந்த பாலமானது சக்கி ஆற்றின் மீது உள்ள ரயில்வே பாலத்தின் தடுப்புச் சுவர் இடைவிடாமல் பெய்த மழை காரணமாக இடிந்து விழுந்தது. தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த நேரத்தில் பாலத்தின் மீது பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. தற்போது இதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டவசமாக விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் உயிர் சேதமும்  ஏற்ப்படவில்லை.

A major tragedy was narrowly avoided in Dhangu, Kangra, Himachal Pradesh, as a train with hundreds of passengers onboard crossed the Chakki River bridge just moments before its foundation gave way due to heavy flooding. Locals have long been complaining that illegal mining has… pic.twitter.com/gi06Pp3Nun
— Nikhil saini (@iNikhilsaini) July 21, 2025

இந்த சம்பவம் குறித்து நூர்பூர் எஸ்.பி தெரிவிக்கையில் “அப்பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகிலுள்ள தங்கு சாலையை இப்போதைக்கு மூடிவிட்டு, ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளோம்” என்றார்.

கத்ராவில் நிலச்சரிவு- தமிழர் பலி:

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் செல்லும் பழைய பாதையில் திங்கள்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டதில் யாத்திரைக்கு சென்ற ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்ததாக. உயிரிழந்தவர் சென்னையைச் சேர்ந்த 70 வயதான குப்பன் சீனிவாசன் என்ற நபர் பலத்த காயமடைந்து, சிகிச்சையின் போது உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Read Entire Article