<div id=":r8" class="Am aiL Al editable LW-avf tS-tW tS-tY" tabindex="1" role="textbox" spellcheck="false" aria-label="Message Body" aria-multiline="true" aria-owns=":tn" aria-controls=":tn" aria-expanded="false">
<div dir="ltr">
<p>பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தின் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டி வரை சென்று பதக்கத்தை பெறவதற்கான வாய்ப்பை பெற்றார் வினேஷ் போகத். வெற்றி பெற்றால் தங்க பதக்கம், தோற்றால் வெள்ளி பதக்கம் என்ற நிலை இருந்தது. இந்நிலையில், இறுதிப்போட்டி வரை சென்றபோதிலும், போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகளவு இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. </p>
<p>இந்நிலையில், வினேஷ் போகத்தின் ஊட்டச்சத்து நிபுணரும், மருத்துவருமான தின்ஷா பர்திவாலா தெரிவித்துள்ளதாவது, வினேஷின் தலைமுடியை குறைத்து உடல் எடையை குறைக்க முயற்சி செய்தோம். இரவு ,முழுவதும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க முயற்சித்தோம். உடல் எடையை குறைக்க , அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டோம் என தெரிவித்தார்.</p>
</div>
</div>