Villupuram : விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ரயிலில் வந்திறங்கிய யூரியா உரம்!

1 week ago 2
ARTICLE AD

விழுப்புரம் : முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு 1330 மெ.டன் CIL நிறுவன யூரியா உரமூட்டைகள் காரைக்கால் இரயில் நிலையத்தில் இருந்து வந்துள்ளது என வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு யூரியா உரமூட்டைகள் வருகை!

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் காரைக்கால் இரயில் நிலையத்தில் இருந்து வந்தடைந்த CIL உர நிறுவனத்தின் 1330 மெ.டன் யூரியா உர மூட்டைகளை விழுப்புரம் வேளாண்மை உதவி இயக்குநர் எம்.என்.விஜயகுமார், மற்றும் CIL நிறுவன அலுவலர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடிக்கான நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். மேலும் உளுந்து, நிலக்கடலை, கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது பயிர்களுக்கு தேவையான உரங்களான யூரியா 4182 மெ.டன், டி.ஏ.பி. 1895 மெ.டன், பொட்டாஷ் 1358 மெ.டன், காம்ப்ளெக்ஸ் 8250 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 1889 மெ.டன் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும்
உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

1330 மெ.டன் யூரியா உர மூட்டைகள் சரக்கு ரயிலில் வந்தன!

இம்மாவட்டத்திற்கு தேவையான உர விநியோகத் திட்ட இலக்கீட்டின்படி உர நிறுவனங்களிடமிருந்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது சம்பா நெல் சாகுபடிக்கு தேவையான
உரங்கள் பெறப்பட்டு இருப்பு வைக்கப்படுகிறது. அந்த வகையில் CIL நிறுவனத்தில் இருந்து 1330 மெ.டன் யூரியா உர மூட்டைகள் சரக்கு ரயிலில் வந்தன.

இதில் 1330 மெ.டன் யூரியா உரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு 448 மெ.டன் மற்றும் தனியார் உரக்கடைகளுக்கு 207 மெ.டன், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 125 மெ.டன், திருவள்ளூர் மாவட்டத்திற்கு
175 மெ.டன், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 275 மெ.டன், வேலூர் மாவட்டத்திற்கு 100 மெ.டன் உர மூட்டைகள் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் அந்தந்த மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.
அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு யூரியா உரங்கள் அனுப்பி வைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கலப்பு உரங்களை இருப்பு வைத்து விற்பனை செய்தல் கூடாது!

உர உரிமம் பெற்ற மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு மானிய உரங்களை பிற உரங்களுடன் இணைத்து விற்பனை செய்யக்கூடாது. மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்புவதோ, பிற
மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யவோ கூடாது. விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டிற்கு மானிய உரங்களை வழங்கக்கூடாது. உரிமத்தில் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை இருப்பு வைத்து விற்பனை செய்தல் கூடாது.

உர இருப்பு மற்றும் விலை விபர பலகையினை வைக்க வேண்டும்!

விற்பனை நிலையத்தில் உர இருப்பு மற்றும் விலை விபர பலகையினை விவசாயிகளின் பார்வையில் படும்படி வைத்து தினசரி பராமரிக்கப்பட வேண்டும். உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் மட்டும் விற்பனை செய்திட வேண்டும் என்றும்  விவசாயிகளுக்கு தேவைக்கு அதிகமாக உரங்களை விநியோகம் செய்யக்கூடாது. நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் போதிய அளவு இருப்பு உள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் இரா.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Read Entire Article