விழுப்புரம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் 21.06.2025 சனிக்கிழமை இன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் தடை ஏற்படும்.

விழுப்புரம் துணை மின்நிலையம்

மின்தடை ஏற்படும் இடங்கள் :

விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, செஞ்சி ரோடு, மாம்பழப்பட்டு ரோடு, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், கே. வி.ஆர் நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூர், ஓம் சக்தி நகர், மரகதபுரம், கப்பூர், பிடாகம், பிள்ளையார் குப்பம், பொய்யப்பாக்கம், நாராயணன் நகர், ஆனாங்கூர், கீழ்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, கம்பன் நகர், தேவநாதசுவாமி நகர், பாணாம்பட்டு, நன்னாட்டம்பாளை, திருநகர், ஜானகிபுரம், சாலை அகரம், தொடர்ந்தனூர், கோலியனூர், மாதிரிமங்கலம், கோலியனூர் கூட்ரோடு, கிழக்கு பாம்பு ரோடு, மகாராஜபுரம், V. அகரம், வழுதரெட்டி போன்ற பல இடங்களில் மின் விநியோகம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் மின்சார விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் முன்கூட்டியே செய்துகொள்ளுமாறு விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.