Vijay: பில்லா பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட விஜய்.. என்னய்யா சொல்றீங்க?

5 months ago 4
ARTICLE AD

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் விஜய். இவரது படங்கள் பலவும் எப்படி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதோ, அதேபோல இவரது பட  பாடல்களும் இன்றளவும் கேட்கும் ரகமாகவே உள்ளது. மெல்லிசை பாடல்கள், குத்துப்பாடல்கள் என இவரது படத்தில் இடம்பெற்ற எவர்கிரீன் பாடல்கள் அனைத்து தரப்பு ரசிகர்களாலும்  விரும்பி கேட்கப்படும் ஒன்றாக உள்ளது.

பில்லா பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட விஜய்:

அந்த வரிசையில் விஜய்யின் குத்துப்பாடல்களில் ஒன்று தஞ்சாவூர் ஜில்லாக்காரி. இந்த பாடல் இடம்பெற்ற சுறா படம் தோல்விப்படமாக அமைந்தாலும் இந்த படத்தில் இடம்பிடித்த இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற பாடல் ஆகும்.

இந்த படத்திற்கு தெலுங்கு திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் மணிசர்மா இசையமைத்திருப்பார். இந்த படத்தில் இடம்பெற்ற தஞ்சாவூர் ஜில்லாக்காரி பாடல் அவர் தெலுங்கில் ஏற்கனவே இசையமைத்து வெற்றி பெற்ற பில்லா படத்தில் இடம்பெற்ற பாடலின் ரீமேக்கே ஆகும்.

தஞ்சாவூர் ஜில்லாக்காரி:

அஜித்குமார் நடிப்பில் 2007ம் ஆண்டு உருவான படம் பில்லா. இந்த படத்தை தெலுங்கில் 2009ம் ஆண்டு பில்லா என்ற பெயரிலே ரீமேக் செய்தனர். அஜித் - நயன்தாரா கதாபாத்திரங்களில் இந்த படத்தில் பிரபாஸ் - அனுஷ்கா நடித்திருப்பார்கள். தெலுங்கு பில்லா படத்தில் பிரபாஸ் - அனுஷ்கா நடிப்பில் பொம்மாயி என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டிருப்பார்கள். இந்த பாடல் தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதே பாடலைத்தான் மணிசர்மா 2010ம் ஆண்டு சுறா படத்தில் பயன்படுத்தியிருப்பார். தெலுங்கில் இந்த பாடலை பாடிய ஹேமச்சந்திராவே, தமிழிலும் இந்த பாடலை பாடியிருப்பார். தெலுங்கில் மாளவிகா பாடிய நிலையில், தமிழில் சைந்தவி பாடியிருப்பார்.

மிகப்பெரிய வெற்றி:

தமிழிலும் நா. முத்துக்குமார் இந்த பாடலை எழுதியிருப்பார். பில்லா படத்தில் இடம்பெற்ற இந்த பாடலுக்கு தமிழில் விஜய் - தமன்னா நடனத்தில் இந்த பாடல் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கும். சுறா படம் தோல்வி அடைந்தாலும் பாடல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த பாடல் மட்டுமின்றி தமிழ் பாடல்கள் பலவும் தெலுங்கு, இந்தியிலும், இந்தி மற்றும் தெலுங்கு பாடல்கள் பலவும் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

தமிழில் பில்லா படத்தை விஷ்ணுவர்தன் இயக்க, தெலுங்கில் மெஹர் ரமேஷ் இயக்கியிருப்பார். தமிழில் பில்லா படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்க, தெலுங்கு பில்லா படத்திற்கு மணிஷர்மா இசையமைத்திருப்பார்.

சுறா படத்தை எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியிருப்பார். சுறா படத்தில் இடம்பிடித்த தஞ்சாவூர் ஜில்லாக்காரி மட்டுமின்றி வெற்றிக் கொடி ஏத்து, சிறகடிக்கும் நிலவு, வங்க கடல் எல்லை, தமிழன் வீர தமிழன், நான் நடந்தாால் அதிரடி ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

Read Entire Article