மகாராஜா வெற்றி விழா

விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவாகியுள்ள மகாராஜா படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனமீர்த்த நிதிலன் ஸ்வாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் அனுராக் கஷ்யப் , மம்தா மோகந்தாஸ் , பாரதிராஜா , அபிராமி , நட்டி , சிங்கம் புலி , பாய்ஸ் மணிகண்டன் , அருள்தாஸ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். காந்தாரா படத்திற்கு இசையமைத்த அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

மகாராஜா படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. விமர்சகர்களுக்கு இப்படத்தின் மேல் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் வெகுஜனத்தை கவரும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது படத்தின் பலம். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இப்படத்திற்கு பாசிட்டிவான ஓப்பனிங் கிடைத்து வருகின்றன. முதல் வாரத்தில் மகாராஜா படம் உலகளவில் 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் இதுகுறித்த அதிகாரப் பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இப்படியான நிலையில் மகாராஜா படத்தின் வெற்றிவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ் திரையுலக பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் ஆர். எஸ் கார்த்திக் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் அஜித் குமார் இருவரையும் புகழ்ந்து பேசியுள்ளார்.

நாங்கள் கேட்டதை விட அதிகமாக கொடுத்தார்கள்

pic.twitter.com/eMDaLkHtoU https://t.co/45qPPcqH96

— Ramesh Bala (@rameshlaus) June 19, 2024

நிகழ்ச்சியில் பேசிய தமிழ் திரையுலக பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திக் “ கொரோனா காலத்தில் அஜித் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் சங்கங்களுக்கு சிறப்பாக உதவி செய்தார்கள்; நாங்கள் கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக உதவி செய்தார்கள்; எல்லா ஹீரோக்களும் உதவி செய்தார்கள் அதில் விஜய்சேதுபதியும், அஜித்தும் நாங்க கேட்டதை விட ரொம்ப அதிகமாகவே உதவி செய்தார்கள் ” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அஜித் மற்றும் விஜய் சேதுபதிக்கு பத்திரிகையாளர் சங்கம் சார்பாக பாராட்டுக்கள் தெரிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து அஜித் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாக மடைந்துள்ளார்கள். அஜித் நடித்த வீரன் படத்தின் காட்சிகளை மீம்களாக பகிர்ந்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

மேலும் படிக்க : SirTeaser: "சாமியை கொன்னுட்டேன்” - விமலின் மிரட்டலான நடிப்பில் வெளியானது சார் படத்தின் டீசர்!

Ajith Kumar: அழகாக பந்து வீசிய மகன் ஆத்விக்! அடிக்க நினைத்து மிஸ் செய்த அஜித்! - வைரலாகும் வீடியோ