விடுதலை 2

வெற்றிமாறன் இயக்கிய படங்களில் அதிக கால அவகாசம் எடுத்துக் கொண்ட படம விடுதலை. சிறிய பட்ஜெட்டில் வெறும் 40 நாட்கள் திட்டமிடப்பட்ட இந்த படம் அடுத்தடுத்த பாகங்களாக நீண்டு கொண்டே செல்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு விடுதலை முதல் பாகம் திரையரங்கில் வெளியானது. சூரி இப்படத்தில் நாயனாக அறிமுகமானார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஓராண்டு காலம் கடந்துள்ளது. வெற்றிமாறனின் படங்களுல் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் எதிர்பார்ப்பு இருந்து வருவதால் எவ்வளவு தாமதமானாலும் ரசிகர்கள் பொறுமை காத்து வருகிறார்கள்.

முதல் பாகத்தில் சூரி படம் முழுக்க இடம்பெற்றிருந்த நிலையில் விஜய் சேதுபதியின் வாத்தியார் கதாபாத்திரம் அவ்வளவாக இடம்பெறவில்லை. தற்போது உருவாகி வரும் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்துள்ளார். 1960 களில் நடக்கும் கதைக்கள் என்பதால் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியரின் தோற்றத்தை டீஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளமையாக காட்சிபடுத்தி வருகிறார்கள்.

இவர்கள் தவிர்த்து இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

விடுதலை 2 ரிலீஸ்

1️⃣Update:
- #Mkexclusive - Viduthalai2 Update🎬

2️⃣Release Date:
- The release date of #Viduthalai2 is confirmed📅

3️⃣Christmas Special:
- The film will release in December as a Christmas special🎄🥁

4️⃣Future Plans:
- The third part of the film, #Viduthalai3 pic.twitter.com/k8cTBQp9k7

— MOVIE KOMPANY 🎬 (@moviekompany) August 28, 2024

விடுதலை 2 படம் முன்னதாக தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து விடுதலை மூன்றாம் பாகமும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க : Vaazhai Box Office: நல்ல கதை தான் சார் கிங்.. மாரி செல்வராஜின் வாழை வசூல் தெரியுமா?

Puranaanooru : சூர்யா வெளியே..சிவகார்த்திகேயன் லோகேஷ் கனகராஜ் உள்ளே...புறநாநூறு புதிய அப்டேட்ஸ்