வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் திருமணம்

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சரத்குமார் மகள் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் திருமணம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், திருமணத்துக்கு முன்னதான கொண்டாட்டங்களான ஹல்தி, மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பிரபலங்கள் வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் திருமண கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அந்தப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.

நடிகை வரலட்சுமியின் சங்கீத் பங்க்ஷன் நேற்றிரவு சென்னை ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. முதல் ஆளாக இந்த விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் தம்பதி. அவர்கள் இருவரும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அழைத்து செல்லப்படும் வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

தலைவரின் லேட்டஸ்ட் வீடியோ

சரத்குமார் மகளின் இல்ல திருமணவரவேற்பு விழாவில் முதல் ஆளாக வந்து வாழ்த்திய தலைவர் #Rajinikanth #ThalaivarNirandharam pic.twitter.com/PFHunJ1OrG

— Rajni fans club (@BalajiB17408405) July 2, 2024

ரஜினிகாந்த் முதல் த்ரிஷா வரை

மேலும் வரலட்சுமியின் சங்கீத் பங்கஷனில் மிகவும் ஜாலியாக கலந்து கொண்டு என்ஜாய் செய்தார் நடிகை த்ரிஷா. வரலட்சுமிக்கு டைட் கிஸ் கொடுக்கும் புகைப்படமும், ராதிகாவுடன் த்ரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படமும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும், இந்தக் கொண்டாட்டத்தில் நடிகை மீனா, பிரபு, பிரபு தேவா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமார் தனது மகனுடன் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதன் புகைப்படங்களை அனிதா விஜயகுமார் அவரின் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என களைகட்டிய வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் சங்கீத் பங்ஷனில் சரத்குமார் மற்றும் ராதிகா தெறிக்க விடும் வகையில் ரௌடி பேபி பாடலுக்கு நடனமாடினார்கள்.

மேலும் பல திரை பிரபலங்கள், பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் பிரமுகர்களுக்கும் சரத்குமார் தனது மகள் வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார். இன்று தாய்லாந்தில் திருமணம் நடைபெற்றதால் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் திரளாக திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.