நெருங்கும் தேர்தல்- திமுக போடும் தேர்தல் பிளான்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியை வலுப்படுத்தும் வகையிலும், ஆளுங்கட்சியான திமுக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிமுக மற்றும் ஓபிஎஸ் அணியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து திமுகவிற்கு பல்டி அடித்து வருகிறார்கள். அந்த வகையில் ஜெயலலிதா அமைச்சரவையில் முக்கிய அமைச்சராகவும், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் வைத்திலிங்கம், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக இபிஎஸ் அணியில் இருந்து வெளியேறியவர் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். ஆனால் ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் அங்கிருந்தவர்கள் திமுகவிற்கு பல்டி அடித்து வருகிறார்கள்.

திமுகவிற்கு பல்டி அடித்த வைத்திலிங்கம்

தஞ்சை மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக பார்க்கப்பட்ட வைத்திலிங்கம், திமுகவில் இணைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் வைத்திலிங்கம் கடந்த வாரம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனையடுத்து இன்று தஞ்சையில் நடைபெற்ற விழாவில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் கூண்டோடு திமுகவில் இணைந்தனர். அப்போது திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் அனைவரையும் வரவேற்றார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், தஞ்சை மகளிர் மாநாட்டிற்கு வந்த போது, இணைப்பு விழா நடைபெறுகிறது வந்துவிட்டு செல்லவும் என கூறினார்கள். எனவே இங்கு வந்து பார்த்த பிறகு தான் இது இணைப்பு விழாவா.? அல்லது மாநாடா என நினைக்கும் அளவிற்கு நடைபெறுகிறது. இவ்வளவு பெரிய கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு பேசாமல் போனால் நன்றாக இருக்காது.

சட்டசபையில் சோகமாக வைத்திலிங்கம்

முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம் தாய் கழகமான திமுகவில் இணைத்துக்கொண்டுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் இணைந்த ஒரு வார காலத்தில் இவ்வளவு சிறப்பான இணைப்பு விழாவை நடத்தியுள்ளார். நாம் எதிர்பார்த்த அளவிற்கு அதிகமாக உழைப்பார். இந்த நம்பிக்கை திமுகவில் உள்ள அனைவருக்கும் வந்துள்ளது. வைத்திலங்கத்தை பல முறை பார்த்ததுண்டு. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் தலைமையில் பணியாற்றும் போது அவர்களுக்கு விசுவாசமாக இருந்து, சிறப்பாக சுறுசுறுப்பாக பணியாற்றிய காட்சியை பார்த்ததுண்டு. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக உடைந்து, அது சின்னபின்னமாக இருக்கும் போது சட்டமன்ற வைத்திலிங்கம் அமர்ந்திருக்கும் காட்சியை பார்க்கும் போது அவர் முகத்தில் ஒரு சோர்வு இருந்து கொண்டே இருக்கும்.

வைத்திலிங்கம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துள்ளார்

ஏதையோ பறி கொடுத்து போல் இருப்பார். வேண்டா வெறுப்பாக சில கேள்வியை கேட்பார். வேண்டா வெறுப்பாக அமர்ந்திருப்பார். என்ன என்று தான் இப்போது தான் உணர்ந்தேன். சுய மரியாதையோடு இருக்க முடியவில்லையே, ஏக்கம் உள்ளத்தில் இருந்துள்ளது. என்ன லேட்டா வந்து சேர்ந்துள்ளார். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா பணியாற்ற போகிறார். அதெல்லாம் நமக்கெல்லாம் மகிழ்சி தந்துள்ளது. தேர்தல் நெருங்க போகிறது. மிகப்பெரிய வெற்றி பெற போகிறோம் என்பதில் சந்தேகம் இல்லை.

இணைந்த தொண்டர்களை அறிவாலயத்தை வரவேற்றேன். தற்போது அவரையும் வரவேற்று உங்களையும் வரவேற்கிறேன். தேர்தல் பணியாற்ற உறுதியெடுப்போம். சபதம் எடுப்போம் என மீண்டும் திமுக அரசு உதயமாகி மேலும் பல சாதனைகள் படைக்க பணி மும்முரமாக இருக்க வேண்டும். வெல்வோம் 200.. படைப்போம் வரலாறு என முதலமைச்சார் ஸ்டாலின் பேசினார்.