படிப்பு காலங்களில் வீரப் பயிற்சி பெறவில்லை என தான் வருத்தப்படுவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான வைரமுத்து சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தான் பங்கேற்கும் நிகழ்வுகளை பதிவுகளாக வெளியிடுபவர். தான் பாராட்ட விரும்பும் ஒன்றை பற்றி உடனடியாக பதிவுகளை வெளியிடுவது வழக்கம். மேலும் யாரேனும் நபர்களை வாழ்த்து, திரைப்பட பாடல் உருவாக்கம் என அனைத்து நிகழ்வுகளையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவார். இப்படியான நிலையில் வைரமுத்து தற்போது உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அந்த வகையில் வைரமுத்து தற்போது சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.

நான் ஏந்தியிருக்கும்
எஸ்.ஐ.ஜி 550 துப்பாக்கி
ஏ.கே 47ஐக் கடைந்தெடுத்தது
மற்றும் கடந்தது

எடை குறைந்த
இயக்க எளிதான
துல்லியத் துப்பாக்கி இது

சுவிட்சர்லாந்து
பள்ளிக் கல்வியில்
இது வீரப் பயிற்சிக்கு
வினைப்படுகிறது;
ராணுவ சேவைக்கு
விதையிடுகிறது

இந்தப் பயிற்சி
தன்னம்பிக்கை ஊட்டித்… pic.twitter.com/Z0ErFMMjEg

— வைரமுத்து (@Vairamuthu) June 20, 2024

இதனிடையே தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் “நான் ஏந்தியிருக்கும் எஸ்.ஐ.ஜி 550 துப்பாக்கி ஏ.கே 47ஐக் கடைந்தெடுத்தது மற்றும் கடந்தது எடை குறைந்த இயக்க எளிதான துல்லியத் துப்பாக்கி இது சுவிட்சர்லாந்து பள்ளிக் கல்வியில் இது வீரப் பயிற்சிக்கு வினைப்படுகிறது; ராணுவ சேவைக்கு விதையிடுகிறது இந்தப் பயிற்சி தன்னம்பிக்கை ஊட்டித் தன்னெழுச்சி தருவதாக நண்பர் கல்லாறு சதீஷின் மகள் இனிஷா தெரிவித்தார் தோட்டாத் தூணியை நிரப்புதல் நெம்புதல் விசை முடுக்கல் சுடுகுறி பார்த்தல் சுடல் என்பன இதன் படிநிலைகள் விருப்பமுள்ளவர்கள் பயிற்சிபெறக் கல்வித் திட்டங்கள் கைதட்டி வரவேற்க வேண்டும் தோழன் செய்யாததைத் துப்பாக்கி செய்யும் எனக்கு இந்தப் பயிற்சி இல்லையே என்று - நான் குறைமனிதனாய்க் குமுறுகிறேன்” என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு அதிக கவனம் ஈர்த்துள்ளது.

முன்னதாக துபாய் சென்ற வைரமுத்து அங்கு கழிவுகளை அப்புறப்படுத்தும் முறைக்கும் பாராட்டுகளை தெரிவித்திருந்தார். அங்கு மலை போன்ற இடத்தை காட்டி, “அது மலையல்ல.. பதப்படுத்தப்பட்ட துபாயின் கழிவுகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணிட்டு மூடிய குப்பைமேடு இதில் துர்நாற்றம் இல்லை; சுகாதாரக் கேடு இல்லை; சுற்றுச்சூழல் மாசு இல்லை; நாளை மக்கிய பிறகு தாவர எருவாகும் சாத்தியங்கள் உண்டு வெளிநாடு செல்லும் அமைச்சர்களும் அதிகாரிகளும் இதுபோன்ற உருப்படியான திட்டங்கள் கண்டு உள்நாட்டில் செயல்படுத்துங்கள்” என வலியுறுத்தியிருந்தார்.