Kanchipuram Varadaraja Perumal Brahmotsavam 2025 Date: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் முக்கிய உற்சவமான கருட சேவை மே மாதம் 13ஆம் தேதி நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்

காஞ்சிபுரம் மாநகரம் கோவில்கள் நிறைந்த நகரமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் பல்வேறு உலக பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. அதேபோன்று காஞ்சிபுரம் மாநகரில், 300 நாட்கள் பல்வேறு கோவில்களின் உற்சவம் நடைபெறுவது சிறப்பு அம்சமாக உள்ளது. ஒவ்வொரு கோயிலிலும் ஒரு சில உற்சவங்கள், மிகவும் புகழ்பெற்ற உற்சவமாக இருந்து வருகின்றன.

அந்தவகையில் 108 வைணவ திவ்ய தளங்களில் ஒன்றாக உள்ள உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் புகழ், அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவிலில், நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவம் என்பது மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் வருகின்ற மே மாதம் 11-ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 19ஆம் தேதி வரை பிரம்மோற்சவம் விமர்சையாக நடைபெற உள்ளது.

உற்சவங்கள் நடைபெறும் நாட்கள் என்னென்ன ?

மே மாதம் 11 ஆம் தேதி (11.05.2025 ): அதிகாலை 4:20 மணியிலிருந்து கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. தங்கச் சப்பரம் வாகனத்தில் காலை சுவாமி எழுந்தருளுகிறார். தொடர்ந்து மாலை 5 மணி அளவில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

மே மாதம 12 ஆம் தேதி ( 12.05.2025): அன்னப்பறவை வாகனத்தில் காலை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். தொடர்ந்து மாலை 5 மணி அளவில், சூரிய பிரபை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

மே மாதம் 13 ஆம் தேதி (13.05.20254): திருவிழாவிற்கு மிக முக்கிய உற்சவம் மாத இருக்கக்கூடிய கருட சேவை (kanchipuram varadharaja perumal temple garuda sevai) உற்சவம் நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு அத்திகிரி மலையில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது, தொடர்ந்து கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்று இரவு உற்சவம் அனுமந்த வாகனத்தில் சுவாமி காட்சியளித்தார்.

மே மாதம் 14 ஆம் தேதி (14.05.2025 ): நாக வாகனத்தில் ஸ்ரீ பரமநாதர் திருக்கோளத்தில் , காலை பக்தர்களுக்கு காட்சி தருகிறார். தொடர்ந்து மாலை சந்திர பிரபை வாகனத்தில் திருவீதி உலா தரிசனம் தருகிறார்.தொடர்ந்து நெல் அளவை நிகழ்ச்சியும் அன்றைய தினம் நடைபெறுகிறது.

மே மாதம் 15 ஆம் தேதி (15.05.2025 ): தங்க பல்லாக்கு உற்சவம் ஸ்ரீ நாச்சியார் திருக்கோலம் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை வேலையில் யாளி வாகனத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது.

மே மாதம் 16 ஆம் தேதி (16.05.2025 ): ஸ்ரீ வேணுகோபாலர் திருக்கோலத்தில் தங்கச் சப்பரத்தில் காட்சியளிக்கிறார். இதனை தொடர்ந்து சொர்ண அபிஷேகமும் நடைபெறுகிறது. மாலை வேலையில் யானை வாகனத்தில், வீதி உலா மற்றும் இரவு ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் சன்னதி தெருவில் ஏசல் நிகழ்ச்சியும், நடைபெறுகிறது.

மே மாதம் 17 ஆம் தேதி (17.05.2025): விழாவின் பிரதான திருவிழா திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. காலை 2 மணி அளவில் உற்சவர் புறப்பாடும், தொடர்ந்து திருத்தியரை சுவாமி எழுந்தருதல் நிகழ்ச்சியும், இதனை அடுத்து தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது.

மே மாதம் 18 ஆம் தேதி (18.05.2025): பகல் 2:30 மணி அளவில் தொட்டி திருமஞ்சனம் மற்றும் மாலை 6 மணி அளவில் குதிரை வாகன உற்சவம் நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு ஸ்ரீ ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் ஏசல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மே மாதம் 19- ஆம் தேதி (19.05.2025): ஆள்மேல் பல்லாக்கு (மட்டை அடி உற்சவம்) தொடர்ந்து, காலை 10 மணி அளவில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.