Vaibhav Sooryavanshi: சூரசம்ஹார சூர்யவன்ஷி! உடைச்ச ரெக்கார்ட் எத்தனை? படைச்ச ரெக்கார்ட் என்னென்ன?

1 week ago 3
ARTICLE AD

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இறுதிப்போட்டிக்கு ஆர்சிபி முன்னேறிய நிலையில், குவாலிஃபயர் 2 போட்டியில் குஜராத்துடன் ஆடும் அணி யார்? என்பதைத் தீர்மானிக்கும் எலிமினேட்டர் போட்டி நேற்று நடந்தது.

சாதனைகளை படைத்த சூர்யவன்ஷி:

இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் குவாலிஃபயர் 2 போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக சூர்யவன்ஷி அமைந்தார். அவர் வெறும் 29 பந்துகளில் 5 பவுண்டரி 12 சிக்ஸருடன் 97 ரன்கள் குவித்ததே ராஜஸ்தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த போட்டியைப் பொறுத்தமட்டில் சூர்யவன்ஷி ஏராளமான சாதனைகளை படைத்தார்.

ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள்:

ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை இதுநாள் வரை கிறிஸ் கெயில் தன்வசம் வைத்திருந்தார். அவர் 2013ம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக 59 சிக்ஸர்களை விளாசியதே அந்த சாதனையாக இருந்தது. சூர்யவன்ஷி இந்த சீசனில் இதுவரை 65 சிக்ஸர்களை விளாசி அந்த சாதனைய முறியடித்தார்.

அதிவேக அரைசதம்:

ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் சூர்யவன்ஷி படைத்துள்ளார். அவர் 16 பந்துகளில் நேற்றைய போட்டியில் அரைசதம் விளாசினார். இதற்கு முன்பு சுரேஷ் ரெய்னா 2014ம் ஆண்டு 16 பந்துகளில் அரைசதம் விளாசியிருந்தார். சூர்யவன்ஷி நேற்று அவரது சாதனையை சமன் செய்தார்.

ஒரே இன்னிங்சில் அதிக சிக்ஸர்கள்:

சூர்யவன்ஷி நேற்று சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் 12 சிக்ஸர்களை பறக்கவிட்டார். மும்பை அணிக்கு எதிராக சுப்மன்கில் கடந்த 2023ம் ஆண்டு 10 சிக்ஸர்களை விளாசியதே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய சாதனையை சுப்மன்கில்லிடம் இருந்து சூர்யவன்ஷி பறித்தார்.

இந்த சாதனை மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் இளம் வயதிலே அதிக அரைசதம் விளாசிய வீரர், இளம் வயதிலே சதம் அடித்த வீரர், இளம் வயதிலே அதிக சதம் அடித்த வீரர் என்ற பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.

15 வயதான சூர்யவன்ஷி இதுவரை 22 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 932 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 103 ரன்களை விளாசியுள்ளார். இதில் 2 முறை டக் அவுட்டாகியுள்ளார். 5 அரைசதங்கள் மற்றும் 2 சதங்கள் விளாசியுள்ளார். இந்த தொடரில் மட்டும் 15 போட்டிகளில் 680 ரன்களை சூர்யவன்ஷி குவித்துள்ளார்.

ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கை தனி ஆளாக இந்த தொடர் முழுவதும் சூர்யவன்ஷி சுமந்துள்ளார். அவர் தொடக்கத்திலே அவுட்டாகிவிட்டால் அதன்பின்பு அவர்கள் பேட்டிங்கில் சொதப்புகின்றனர். நேற்றைய போட்டியிலும் 270 ரன்கள் வரை செல்ல வேண்டிய ரன்கள் 243ல் கட்டுப்படுத்தப்பட்டதே அதற்கு உதாரணம். நேற்றைய போட்டியில் சூர்யவன்ஷி சதம் விளாசியிருந்தால் ஐபிஎல் வரலாற்றிலே குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை படைத்திருப்பார்.

Read Entire Article