நடிகர் கார்த்தி நடித்திருக்கும் “வா வாத்தியார்” படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

எதிர்பார்ப்பில் “வா வாத்தியார்”

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படத்துக்குப் பின் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் படம் “வா வாத்தியார்”. இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாகவும், கிரித்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், ஆனந்தராஜ், வடிவுக்கரசி, பி.எல்.தேனப்பன், சத்யராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜிஎம் சுந்தர் என ஏகப்பட்ட பேர் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜனவரி 14) போகி பண்டிகை அன்று தியேட்டரில் வெளியாகிறது. இதற்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது. இப்படியான நிலையில் “வா வாத்தியார்” படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் எம்ஜிஆர் மறைந்த நாளான டிசம்பர் 24ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு,கார்த்தி பிறப்பது போன்றும், தீவிர எம்ஜிஆர் ரசிகரான ராஜ்கிரண் “வாத்தியார் பிறந்திருக்கிறார்” என சொல்வது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

Every world has a moment before the hero arrives 🏇✨#VaaVaathiyaar — Sneak Peek Out Now

🔗 https://t.co/Hab9R8fID7

In cinemas from January 14

Bookings open Now 🔥#VaaVaathiyaarPongal 🥳 pic.twitter.com/Lyg22KzsWN

— Studio Green (@StudioGreen2) January 13, 2026

இதனைப் பார்த்த ரசிகர்கள் எப்படி பராசக்தி படம் திமுகவுக்கு எடுக்கப்பட்டதோ, அதேபோல் அதிமுகவினரை கவர வா வாத்தியார் படத்தில் எம்ஜிஆர் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக சிலாகித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.