USA vs Canada T20 WC 2024: ஜோன்ஸ் வெறித்தனம்! வெற்றியுடன் டி20 உலகக்கோப்பையை தொடங்கிய அமெரிக்கா!

1 year ago 6
ARTICLE AD

டி20 உலகக்கோப்பை அமெரிக்காவில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் தொடரை நடத்தும் அமெரிக்காவும் - கனடாவும் நேருக்கு நேர் மோதின. இதில், டாஸ் வென்ற அமெரிக்கா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கனடா 20 ஓவர்களில் 194 ரன்கள் குவித்தது.

வெற்றியுடன் தொடங்கிய அமெரிக்கா:

இதையடுத்து, 195 ரன்கள் என்ற இலக்குடன் அமெரிக்கா களமிறங்கியது. ஸ்டீவ் டெய்லர் டக் அவுட்டாகியும், கேப்டன் மோனங்க் படேல் 16 ரன்னிலும் அவுட்டாக ஆண்ட்ரீஸ் கோவ்ஸ் - ஆரோன் ஜோன்ஸ் அதிரடியாக ஆடினர். குறிப்பாக, ஆரோன் ஜோன்ஸ் ருத்ரதாண்டவம் ஆடினார். அவரது அதிரடியால் அமெரிக்கா இலக்கை நோக்கி முன்னேறியது. ஆண்ட்ரீஸ் கோவ்ஸ் 46 பந்துகளில் 65 ரன்களுக்கு அவுட்டாக, ஜோன்ஸ் தனி ஆளாக அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இதனால், அமெரிக்கா 17.4 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஜோன்ஸ் வெறித்தனம்:

இதன்மூலம் அமெரிக்கா இந்த டி20 உலகக்கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. அமெரிக்காவிற்காக அதிரடியாக ஜோன்ஸ் 40 பந்துகளில் 4 பவுண்டரி 10 சிக்ஸருடன் 90 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜோன்ஸ் வெறும் 22 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

Read Entire Article