US Tariff India: ”போர் மூலம் லாபம் பார்க்கும் இந்தியா” பாவம் பார்க்க முடியாது என அமெரிக்கா மிரட்டல்

3 months ago 4
ARTICLE AD

US Tariff India: இந்தியாவிகு விதிக்கப்பட்ட 50 சத்விகித வரி விதிப்பில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், அமெரிக்கா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

”போரில் லாபம் பார்க்கும் இந்தியா” - அமெரிக்கா

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவேரா வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட 50 சதவிகித வரி விதிப்பை அமல்படுத்துவதற்கான அவகாசத்தை, ஆகஸ்ட் 27ம் தேதிக்கு பிறகு அதிபர் ட்ரம்ப் நீட்டிப்பார் என எதிர்பார்க்கவில்லை.

இந்தியா எனக்கு பிடிக்கும். பிரதமர் மோடி ஒரு பெரும் தலைவர். ஆனால், தயவு செய்து சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு என்ன என்பதை கவனியுங்கள். தற்போதைய சூழலில் நீங்கள் அமைதியை உருவாக்குவதற்கான வேலையை செய்யவில்லை. இது போரை நிலைநிறுத்துவது போன்று உள்ளது. அவர்களுக்கு எண்ணெய் தேவையில்லை. சுத்திகரிப்பு மூலம் லாபம் ஈட்டும் திட்டமாக உள்ளது” என குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய பணத்தில் ரஷ்ய ஆயுதங்கள்:

தொடர்ந்து பேசுகையில், “இந்தியா எங்களிடம் பொருட்களை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை ரஷ்யாவிடம் இருந்து எண்ணெயை வாங்க பயன்படுத்துகிறது, பின்னர் அது சுத்திகரிப்பு நிலையங்களால் பதப்படுத்தப்படுகிறது. அந்த பணியில் அவர்கள் அங்கு நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள். அப்படி எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவால் கொடுக்கப்படும் பணத்தால் ரஷ்யர்கள் அதிக ஆயுதங்களை உருவாக்கவும் உக்ரேனியர்களைக் கொல்லவும் பயன்படுத்துகிறார்கள். எனவே அமெரிக்க வரி செலுத்துவோர் உக்ரைனிற்கு அதிக ராணுவ உதவிகளை வழங்க வேண்டி உள்ளது. அமைதிக்கான பாதை இந்தியா வழியாகவே (ரஷ்யா - உக்ரைன் போருக்கு காரணம் இந்தியா என கிண்டலாக பேசியுள்ளார்)  செல்கிறது.

”வரியில் விலக்கு இல்லை”

வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் அதிகப்படியான வரி விதிக்கப்படுகிறது. அவர்களுடன் நாங்கள் மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறையை காண்கிறோம். இதனால் அமெரிக்க தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது, அமெரிக்க வணிகங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.  வர்த்தகத்தில் அமெரிக்காவை ஏமாற்றுவதால் 25% வரிகளையும், ரஷ்ய எண்ணெய் காரணமாக 25% வரிகளையும் நாம் விதிக்கப்படுகிறது. இதில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பு இல்லை” என நவேரா விளக்கமளித்துள்ளார். உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவிடம் இருந்து எண்ணெயை வாங்கியதை ஆரம்பத்தில் பாராட்டிய அமெரிக்காவே, இப்போது வரி விதிப்பை ஏற்கமுடியாது என்ற வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நவேரா இப்படி பதிலளித்துள்ளார்.

இந்தியாவின் திட்டம் என்ன?

வர்த்தக ஒப்பந்தத்தில் ட்ரம்ப் தரப்பு கோரிக்கையை இந்தியா ஏற்காததே கூடுதல் வரிக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதனை உணர்ந்தே, 50 சதவிகித வரி விதிப்பையும் இந்தியா கண்டுகொள்ளாமல், தனது வர்த்தகத்தை பன்முகப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. உள்நாட்டின் ஏற்றுமதியில் பிரதான சந்தையாக அமெரிக்கா திகழ்வதை மாற்றி, பல நாடுகளுக்கும் தனது ஏற்றுமதியை விரிவு செய்ய தீவிரம் காட்டி வருகிறது. இதன் மூலம், அமெரிக்காவின் கூடுதல் வரி மிரட்டலால், உள்நாட்டு பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கங்களை போக்க மத்திய அரசு முயன்று வருகிறது.

Read Entire Article