மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் இன்று (ஏப்.22) வெளியாகி உள்ளன. இதில், சக்தி துபே என்னும் பெண் தேர்வர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஹர்ஷிதா கோயல் இரண்டாவது இடத்தையும், டோங்ரே அர்ச்சித் பராக் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

யுபிஎஸ்சி அறிவிக்கையின்படி, இந்தத் தேர்வு மூலம் 1,129 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் இந்திய நிர்வாக சேவையில் (ஐஏஎஸ்) 180 பதவிகளும், இந்திய வெளியுறவு சேவையில் (IFS) 55 பதவிகளும், இந்திய காவல் சேவையில் (ஐபிஎஸ்) 147 பதவிகளும் அடங்கும்.

தேர்வர்கள் https://upsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளை அறியலாம்.