Ukkadam Bus Stand: மின்னல் வேகத்தில் உக்கடம் பேருந்து நிலைய பணிகள்! நனவாகும் கோவை மக்களின் கனவு.. திறப்பு விழா எப்போது?

1 month ago 5
ARTICLE AD

கோவை மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட உக்கடம் பேருந்து முனையத் திட்டத்தை நிறைவு செய்ய கோயம்புத்தூர் மாநகராட்சி (CCMC) பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்த பணிகளை  பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், கோவை மாநகராட்சி நிர்வாகம் தற்போது மேற்கூரை மற்றும் இதர பணிகளுக்காக, முன்கூட்டியே வடிவமைக்கப்பட்ட ஸ்டீல் கட்டமைப்புகளை தளத்தில் நிறுவும் பணிகளைத் தொடங்கியுள்ளது.

திட்டப் பின்னணி:

இந்த திட்டம் முதன்முதலில் மார்ச் 13, 2024 அன்று பொள்ளாச்சிக்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மதிப்பீடு முதலில் 20 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட இத்திட்டத்தின் செலவு, விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பிற்குப் பிறகு ரூ. 21.55 கோடியாக மாற்றப்பட்டது. பல்வேறு வடிவமைப்பு மாற்றங்கள், ஒப்புதல்கள் மற்றும் நிதி ஒதுக்கீட்டிற்குப் பிறகு, ஆகஸ்ட் 24, 2025 அன்று கட்டுமானப் பணிகள் தொடங்கின.

நவீன உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள்:

உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால கட்டுமானத்திற்காக பழைய பேருந்து நிலையத்தின் பெரும் பகுதி இடிக்கப்பட்டதால், நவீன வசதிகளுடன் கூடிய விரிவான அமைப்புகளுடன் இரண்டு தனித்தனி முனையங்கள் அமைக்கப்படுகின்றன.

முனையம் I: உக்கடம் காவல் நிலையத்திற்கு எதிரே (முன்னாள் மீன் சந்தை பகுதியில்) அமைய உள்ளது. இங்கிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

முனையம் II: தற்போதைய பேருந்து நிலையம் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு அருகிலேயே அமைய உள்ளது. இங்கிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

சிறப்பம்சங்கள்:

மொத்தம் 58 பேருந்து நிறுத்தங்கள் (Bus bays) மற்றும் ஒரே நேரத்தில் 80 பேருந்துகளை கையாளும் திறன்.

பயணிகளுக்கான இருக்கை வசதிகள் (60 பேர் அமரக்கூடியது), மூன்று கழிப்பறைகள், இரண்டு பாலூட்டும் தாய்மார்கள் அறைகள்.

வணிக வளாகங்கள், இலவச வைஃபை (Wi-Fi), மொபைல் சார்ஜிங் புள்ளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள்.

பாதுகாப்பிற்காக 30 சிசிடிவி (CCTV) கேமராக்கள் மற்றும் அவசர கால கண்காணிப்பு மையம்.

வளாகத்தின் அழகை மேம்படுத்த அலங்காரச் செடிகளுடன் கூடிய பசுமைப் புல்வெளி (Landscaping).

தற்போதைய நிலை:

தற்போது இங்கிருந்து பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி மற்றும் கேரளாவின் சில பகுதிகளுக்கும், நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சராசரியாக நாளொன்றுக்கு 80 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் கூறுகையில், "சுமார் 45% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. வேறு இடத்தில் முன்கூட்டியே தயார் செய்யப்பட்ட எஃகு கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் பணிகளை விரைவுபடுத்தியுள்ளோம். பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், பிப்ரவரி-மார்ச் மாதத்திற்குள் இரண்டு முனையங்களையும் முடிக்க இலக்கு வைத்துள்ளோம்," எனத் தெரிவித்தார்.

Read Entire Article