தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்கவில்லை. பதிவான வாக்குகள் 4.93 கோடி வாக்குகளில் 1.72 கோடி தான் ஆளுங்கட்சி பெற்றுள்ளது. மீதமுள்ள 3.21 கோடி பேர் உங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். 65% மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த ஆட்சி மீது எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை குறைந்து வருவதாக தெரிவித்தார். தவெக கட்சி தலைவர் தனது வெற்றி குறித்த நம்பிக்கை இல்லாத காரணத்தால் இரண்டு இடத்தில் போட்டியிட்டார். அதில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்துள்ளார். அந்த தொகுதி மக்களுக்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை.

அடுத்தாக தவெக திருப்பத்தூர் எம்எல்ஏ ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே தவெகவிற்கு 106 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதனையடுத்து திமுக கூட்டணி கட்சிகளை இணைத்து ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல் சொன்ன காரணம் குடியரசு தலைவர் ஆட்சி அமையக்கூடாது என்பதற்காக வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துள்ளதாக கூறினார்கள். அதே நேரம் இப்போதும் திமுக தலைமையில் கூட்டணியில் தான் தொடருவோம் என சொன்னார்கள்.

தவெக தலைவர் மத சார்பாற்ற ஆட்சி அமையவேண்டும் என சொன்னார். ஆனால் கொள்கை எதிரி என்று சொன்ன என்டிஏ கூட்டணியில் போட்டியிட்ட உறுப்பினரை தலைவருக்கு தெரியாமல் ஆதரவு கொடுக்க வைத்துள்ளார்கள். இதனை டிடிவி தினகரன், ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக குதிரை பேரம் ஈடுபடுகிறார்கள். மாற்றம் மாற்றம் என சொன்னார்கள் ஆனால் துர்நாற்றம் தான் என விமர்சித்துள்ளார்.

அடுத்தாக என்டிஏ கூட்டணியில் பெரிய கட்சி உள்ள அதிமுக இரண்டாக பிளவு பட்டுள்ளது. பிளவுப்பட்ட ஒரு குழு ஆதரவு தெரிவித்துள்ளது. பிளவுப்பட்ட குழுவில் உள்ள தலைவர் வீட்டிற்கு புது ஷோபா போகுது. அதனை தொடர்ந்து புது முதலமைச்சர் சென்றுள்ளார். முதல்வர் போகும் இடமெல்லாம் சோபா போகிறது. புஷ்பா பட பாணியில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். மாற்றம் என்று கூறுகிறீர்களே, இதன் பின்னணியில் பரிமாற்றம் இருக்கிறதோ என மக்களுக்கு கேள்வி எழுப்புவதாகவும் விமர்சித்தார்.

தேர்தலில் ஊழல் சக்தி எனக் கூறினீர்கள். தற்போது ஊழல் சக்தியுடன் சேர்ந்திருக்கும் உங்கள் ஆட்சி என்ன சக்தி என்று மக்கள் கேட்கத் தொடங்கியுள்ளதாகவும் கேள்வி எழுப்பினார். தேர்தல் பிரசாரத்தில் 'மற்றும் சிலர்' கட்சிகள் எனக் கூறிய கட்சியின் சிலரின் ஆதரவுடன் ஆட்சி நடத்த முயற்சிக்கிறார் முதல்வர் விஜய். அவருக்கு அமைச்சர் பதவியும் கொடுக்க விரும்புகிறார் என தெரிவித்த உதயநிதி விஜய் தலைமையிலான அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் திமுக வெளிநடப்பு செய்தது.