U19 உலகக்கோப்ப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 412 ரன்கள் என்கிற இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்திய அணி,

U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி:

19 வயது உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது ஜிம்பாப்வே மற்றும் நமிபீயாவில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின, இப்போட்டியில் டாஸை வென்ற இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இந்திய அணிக்காக ஆரோன் ஜார்ஜ் - வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங்கைத் தொடங்கினர், ஆப்கான் அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் சதம் விளாசிய ஆரோன் ஜார்ஜ் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

வைப் செய்து அடித்த சூர்யவன்ஷி:

அடுத்து களமிறங்கிய கேப்டன் ஆயுஷ் மாத்ரே பொறுமையாக ஆட சூர்யவன்சி சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி தள்ளினார், இந்த ஜோடியை பிரிக்க இங்கிலந்து அணியின் கேப்டன் தாமஸ் ரே அனைத்து பவுலர்களையும் பயன்படுத்தியும் பலன் கிடைக்கவில்லை, மைதானமும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் இந்திய அணி டி20 போட்டியை போல் ஆடினர்.

சூர்யவன்ஷி சதம்:

கேப்டன் ஆயுஷ் மாத்ரே அரைசதம் அடித்த ஆட்டமிழக்க அடுத்தாக வேதாந்த் திரிவேதி களமிறங்கினார், அபாரமாக ஆடிய சூர்யவன்ஷி சதம் விளாசினார். அபாரமாக ஆடிய சூர்யவன்ஷி 55 பந்துகளில் சதம் விளாசினார். அதில் 8 சிக்ஸர், 8 பவுண்டரி அடங்கும். சூர்யவன்ஷியின் அபார சதத்தால் இந்திய அணி 20 ஓவர்களிலே 200 ரன்களை கடந்தது,

சூர்யவன்ஷி 80 பந்துகளில் 15 பவுண்டரி 15 சிக்ஸருடன் 175 ரன்கள் எடுத்து கடைசியில் அவுட்டானார். இந்திய அணி 25வது ஓவரில் 251 ரன்கள் எடுத்தது.

தேங்கிய ரன்கள்:

சூர்யவன்ஷியின் விக்கெட்டுக்கு பிறகு இந்திய அணியின் ரன்வேகம் வெகுவாக குறைந்தது, வேதாந்த் திரிவேதி 32 ரன்களும், விஹான் மல்ஹோத்ரா 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த அபிஜியான் குண்டு 40 ரன்கள் அடித்தார், 31வது ஓவர் முதல் 40 ஓவர்கள் வரை 36 ரன்களை மட்டுமே எடுத்தது.

கனிஷ்க் அதிரடி:

கடைசி கட்டத்தில் கனிஷ்க் செளகான் அதிரடியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் குவித்தது, கனிஷ்க் செளகான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் மிண்டோ 3 விக்கெட்டும், மோர்கன் மற்றும் கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

412 ரன்கள் என்கிற கடின இலக்குடன் தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.