TVK Vijay: விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா? டெல்லியில் சோனியா, ராகுல் ஆலோசனை - ஷாக்கில் திமுக

4 months ago 5
ARTICLE AD

TVK Vijay: தமிழ்நாடு அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக அதற்காக பணியாற்றி வருகின்றனர். திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு நிகராக தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உண்டாக்கியுள்ளது.

விஜய்யுடன் கூட்டணியா?

கட்சி தொடங்கி ஒன்றரை ஆண்டுகளாக உள்ள நிலையில், நடிகர் விஜய்யுடன் கூட்டணி வைக்க எந்த கட்சியினரும் தயாராக இல்லை. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று அழைப்பு விடுத்தும் அவருடன் கூட்டணி வைக்க எந்த கட்சியினரும் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், விஜய்யின் அந்த அறிவிப்புக்கு அப்போது பல கட்சியினரும் வரவேற்பு தெரிவித்தனர்.

விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்தே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியில் சிலர் விஜய்யின் தவெக-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

ஆலோசனை நடத்திய சோனியா காந்தி:

ஓரிரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் இதுதொடர்பாக காங்கிரஸ் ஆலோசனை நடத்தியுள்ளது. காங்கிரசின் தலைவர்களான சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை தமிழக காங்கிரஸ்  சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சேருவதால் ஏற்படும் நன்மைகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து அவர் அவர்களிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் அவர்களிடம் அளித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு மாவட்டத் தலைவர்களை குஜராத் மாநிலத்தில்  இருப்பது போல நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

உட்கட்சி பூசலில் காங்கிரஸ்:

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் நீடித்து வருகிறது. அதிகளவு உட்கட்சி பூசலால் அவதிப்பட்டு வரும் கட்சியாக தமிழக காங்கிரஸ் நீண்ட காலமாக இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப் பெருந்தகை தற்போது இருந்தாலும்  அவருக்கும் கட்சியில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகி்ன்றனர். இதனால், முக்கிய முடிவுகள் எடுப்பது உள்ளிட்ட பல விவகாரங்களில் தொடர்ந்து சிரமங்களும், சிக்கல்களும் இருந்து வருகிறது.

ஆனால், மூத்த தலைவர்கள் பலரும் சட்டமன்ற தேர்தலில் திமுக-வுடன் பயணிப்பதே காங்கிரசுக்கு ஆரோக்கியமானது என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், கட்சியை வலுப்படுத்த விஜய்யுடன் இணைய வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

அதிர்ச்சியில் திமுக:

விஜய்யுடன் இதுவரை யாரும் கூட்டணிக்கு அதிகாரப்பூர்வமாக வராத நிலையில், பெரிய கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர அவரும் நடவடிக்கை எடுத்து வருகிறார். ராகுல் காந்தியை சந்திக்கவும் விஜய் தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  டெல்லியில் காங்கிரஸ் நடத்திய இந்த ஆலோசனை திமுக-வினர் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Read Entire Article