விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு தலைவலியை உண்டாக்கும் ஆனந்த், அனுமதியின்றி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவால் சர்ச்சை.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள கயத்தூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் பங்கேற்று சமத்துவ பொங்கலை கொண்டாடினார். அதனை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக சார்பில் பொங்கல் தொகுப்பு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவானது அரசு அனுமதி இன்றி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நலத்திட்ட விழா வழங்கும் மேடையில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த்.,

விழுப்புரம், விக்கிரவாண்டி, வி.சாலை என்றாலே வெற்றி தான் ஈரோடு, மதுரை, திருச்சி என எல்லா இடத்திற்கும் மாநாடு நடத்த அனுமதி கேட்ட காலையில் சென்றால் மாலையில் இல்லை என அனுமதி மறுக்கப்பட்டதாகவும், மாநாடு நடத்த இடம் கேட்டவுடன் விவசாயிகள் போட்டி போட்டு கொண்டு இடம் கொடுத்ததாகவும் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். தமிழக மக்களுக்கு நன்றி உள்ளவராக விஜய் இருப்பார்.

அதனால் தான் உச்சத்தை விட்டு மக்கள் பணி செய்ய வந்திருப்பதாகவும், வி.சாலையில் நடைபெற்ற மாநாடு சிறப்பாக இருந்ததாகவும், மாநாடு நடைபெறுவதற்கு ஒரே ஒரு ஒத்த ரூபாய் கொடுக்காமல் 15 லட்சம் மக்கள் கூடியதாகவும் ஒரு ரூபாய் கூட கேட்காமல் உழைக்கிற நிர்வாகி தமிழக வெற்றி கழகத்தில் தான் இருப்பதாக தெரிவித்தார். மக்களுக்கு பிரச்சனை என்றால் விஜய்யும் வெற்றிக் கழகமும் இருக்கும், என்றும் மாநாட்டிற்கு எவ்வளவு பேர் வருவார்கள் என கேட்டபோது மெளனமாக இருந்தததாகவும், காவல் துறை மாநாட்டிற்கு உறுதுனையாக இருந்ததாக தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக மிளிரும் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, அரசியல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். உறுப்பினர் சேர்க்கை துவங்கி, கொள்கை விளக்க மாநாடு, செயற்குழு கூட்டம், நிர்வாகிகளுடனான தொடர் ஆலோசனை என்று அரசியல் களத்தில் சுற்றிச் சுழல துவங்கி இருக்கிறார் விஜய் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து களமிறங்கி இருக்கும் விஜய், அதற்கு இடைப்பட்ட காலத்தில் வரும் இடைத்தேர்தல்களையும் தவிர்க்க முடிவு செய்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் கட்சி தொடங்கி, 2 முக்கிய மேடைகளை ஏறியது, அலுவலகத்தில் அழைத்துவந்து மக்களுக்கு நிவாரணம் கொடுத்தது, மாநிலத்தின் முக்கிய பிரச்னைகளுக்கு அறிக்கை விடுவது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எனினும், அவர் ஏன் மக்களை நேரடியாக சென்று சந்திக்கவில்லை. இது என்ன work from home அரசியலா என்று, அவருக்கு எதிர் துருவத்தில் இருக்கும் பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

கடைசி படத்தின் ஷூட்டிங் நடைபெறுவதால், அதனை முடித்துக்கொடுத்துவிட்டு களத்திற்கு நேரடியாக வருவார் என்று தவெக தர்ப்பில் விளக்கமளிக்கின்றனர். இந்த நிலையில் மேலும் சர்ச்சை அதிகரிக்கும் வகையில் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் விக்கிரவாண்டி அருகே உள்ள கயத்தூர் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார் அப்பொழுது அரசு அனுமதியின்றி பள்ளி வளாகத்தில் கொண்டாடிய சம்பவம் தற்போது பேசு பொருளாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.