TVK Vijay: விஜய் ஆட்சியமைக்கணும்.. கொதித்தெழும் தமிழ் சினிமா பிரபலங்கள்..

4 weeks ago 5
ARTICLE AD

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அக்கட்சி தலைவர் விஜய்க்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகம் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வென்றாலும் அக்கட்சி தலைவர் விஜயை ஆட்சியமைக்க வருமாறு அழைக்காமல் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் காலம் தாழ்த்தி வருகிறார். பதவியேற்ற பிறகு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன் என விஜய் தெரிவித்த நிலையில், பெரும்பான்மை இருந்தால் தான் ஆட்சியமைக்க அழைக்க முடியும் என ஆளுநர் கறார் காட்டி வருகிறார்.  இப்படியான நிலையில் விஜய்க்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் களமிறங்கியுள்ளனர்.

நடிகர் விஷால் வெளியிட்டுள்ள பதிவில், “ஒருவேளை தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையாமல் , அதற்குப் பதிலாக கற்பனை செய்ய முடியாத, அதிர்ச்சியளிக்கும்  வகையில் திமுக - அதிமுகவின்  கூட்டணி அடுத்த அரசை அமைக்கப் போகிறது என்றால், அது ஒரு குடிமகனாகவும் வாக்காளராகவும், பொதுமக்களிடையே கோரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு முடிவாக இருக்கும் என்பதை நான் உணர்கிறேன். இது யாருக்கும் உகந்ததாக இருக்காது” என தெரிவித்துள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்ட வீடியோவில், ரொம்ப அநியாயம் பண்றீங்களே. விஜயை அழைத்து முதலமைச்சராக உட்கார வையுங்கள். நாட்டில் எந்த வேலையும் நடக்க மாட்டேங்குது. எந்த ஆளுநரும் தமிழ்நாட்டை இப்படித்தான் செய்கிறார். இனிமேல் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகளை வைத்து தான் பதவி பிரமாணம் செய்ய வைக்க வேண்டும். 108 இடங்களில் ஜெயித்து 5 நாட்கள் கடந்து விட்டது. இப்படியே சென்றால் பிற அரசியல் கட்சிகளின் நிலையும் தலைகீழாகி விடும். மீண்டும் செலவு செய்ய எந்த கட்சியும் தயாராக இல்லை. மத்திய அரசு விஜய்க்கு எதிரான ஏன் இப்படி செய்கிறது?. சட்டப்படி நடங்கள். மக்கள் மிகவும் ரொம்ப எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்” என விமர்சித்துள்ளார்.

நடிகர் சௌந்தர் வெளியிட்ட வீடியோவில், புதிதாக ஒருவர் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க வருகிறார் என்றால் என்னென்ன பிரச்னைகள் வருகிறது என பாருங்கள். மு.க.ஸ்டாலினை தவெக ஆட்சிக்கு இடையூறு தர மாட்டோம் என சொன்ன  விஷயத்தில் பாராட்ட வேண்டும். அதேசமயம் திருமாவளவன் 2 இடங்கள் தான் ஜெயித்திருக்கிறார். விஜய் ஆட்சியில் பங்கு கொடுப்போம் என சொல்லியிருந்தார். அவர் ஆட்சிக்கு வந்து என்னதான் செய்கிறார் என்று பாருங்கள். அதை விட்டு விட்டு ஜவ்வு மாதிரி இழுக்கிறீர்கள். ஏற்கனவே ஆண்ட கட்சிகள் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டை சுரண்ட வேண்டுமா?.. இளைஞர்கள் ஆட்சிக்கு வரவேக்கூடாதா?.. இதற்கெல்லாம் நீங்கள் துணை போகலமா? .. 6 மாதம் விஜய் ஆட்சியைப் பார்த்து விட்டு முடிவெடுங்கள். கம்யூனிஸ்ட் என சொல்லும் இரு கட்சிகள் இந்த விவகாரத்தில் தப்பு செய்கிறது. இனிமேலாவது புதிதாக யோசியுங்கள்.

நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், “தமிழ்நாடு மாநிலக் குடிமகன் என்ற முறையில், மக்கள் தங்கள் முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்திருக்கும்போது, ​​அவர் தலைமை தாங்க வேண்டும்” என விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Read Entire Article