TVK Vijay: முதலமைச்சராகும் விஜய்.. திரைத்துறை பிரபலங்கள் அட்வைஸ் மழை!

1 month ago 4
ARTICLE AD

தமிழக சட்டமன்ற தேர்தலில் எதிர்பாராத ஒரு வெற்றியைப் பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள விஜய்க்கு திரைத்துறையில் இருந்து வாழ்த்துகள் மற்றும் அட்வைஸ்கள் குவிந்து வருகிறது.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆட்சியமைக்க 118 இடங்களில் பெரும்பான்மை தேவை என்ற நிலையில் இரு கட்சிகளின் கூட்டணியில் இருக்கும் கட்சிகளிடம் விஜய் ஆதரவு கேட்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலமைச்சராக இன்னும் ஒரு வாரத்திற்குள் விஜய் பொறுப்பேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், அக்கட்சி தலைவர் விஜய்க்கு மொத்த இந்தியாவின் பல துறை சார்ந்த பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய சினிமாவைச் சேர்ந்த பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் விஜய் இப்படியெல்லாம் நீங்கள் செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கையும், அறிவுரையும் வழங்கி வருகின்றனர்.

மக்களுக்காகவே உழைக்கும் தலைவன்

அந்த வகையில், “அன்பு விஜய் அவர்களுக்கு,  எண்ணற்ற வெற்றித் தோல்விகளையும், ஏற்ற இறக்கங்களையும் கண்டிருப்பீர்கள்! அதே நேர்மையான பாதையை கடைப்பிடித்து அரசியலில் செயலாற்றுங்கள். மக்களுக்காகவே உழைக்கும் தலைவனைத்தான் தமிழக மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் என்பது  வணிகமாக மாறிப்போன சூழலில் ஒவ்வொரு நொடிகளும் சோதனைகளுக்கு உட்பட்டது தான்! மக்களை மதியுங்கள், நேசியுங்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் ஊடகங்களை தவறாமல் சந்தியுங்கள். தவறுகளை மறைப்பதற்காக சமூக இணைய கூலியாட்களை வைத்துக் கொள்ளாதீர்கள்! தாழ்ந்து கிடக்கும் தமிழையும், தமிழர்களையும் முன்னேற்ற பாடுபடுங்கள்.

இவை அனைத்தையும் செய்தாலே நீங்களே ‘என்னை விட்டு விடுங்கள்’ எனக் கூறினாலும் மக்கள் உங்களை விட மாட்டார்கள்.  மனம் குளிர வாழ்த்துகிறேன்!” என இயக்குநர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.

தமிழையும் தமிழரையும் கொண்டாடும்

தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!

அன்புள்ள விஜய் அவர்களுக்கு,⁰ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள்.⁰பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும்…
— A.R.Rahman (@arrahman) May 4, 2026

அதேபோல் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்! அன்புள்ள விஜய் அவர்களுக்கு,
ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள்.
பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும் கொண்டாடும்,  சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!” எனவும் தெரிவித்துள்ளார்.

Read Entire Article