தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை இயக்குநர் அமீர் மறைமுகமாக சாடி தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்திருக்கிறார். இதற்கு தவெகவினர் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தவெக மகளிர் தின விழா

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ம் தேதியான நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று மகளிர் தின கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்ட எக்ஸ் வலைத்தளப்பதிவில், "மார்ச் 7ம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக மகளிருக்கான திட்டங்கள் குறித்து தவெக தலைவர் விஜய் அறிவிக்கவுள்ளார்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், "இந்நிகழ்ச்சிக்கு QR குறியீட்டுடன் கூடிய நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் அனைத்து மாவட்டங்களிலும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படும்" எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கேவலமான அரசியல் நிகழ்ச்சி - இயக்குநர் அமீர் விமர்சனம்..https://t.co/wupaoCzH82 | #TVK #TVKVijay #DirectorAmeer #WomensDay #Politics #ABPNADU pic.twitter.com/L63SJbbh2Q

— ABP Nadu (@abpnadu) March 7, 2026

சர்ச்சைகளுக்கு பதிலளிப்பாரா விஜய்?

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் மீது சமீப காலமாக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டதாக வெளியான வழக்கு மனு, அதில் நடிகை ஒருவருடன் விஜய்க்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டது என அடுத்தடுத்து விஜய் சர்ச்சையில் சிக்கினார். இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் குடும்ப நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷாவுடன் ஒரே நிற ஆடையில் ஜோடியாக வந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

விஜய்க்கு பலமே மகளிர் வாக்குகள் தான் என்ற போதிலும் அவர் ஏன் இப்படி தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்துக் கொள்கிறார் என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இத்தகைய விமர்சனங்களுக்கு விஜய், சங்கீதா, த்ரிஷா தரப்பு என யாருமே பதிலளிக்கவில்லை. நிச்சயம் இதற்கு மகளிர் தின விழாவில் விஜய் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமீர் கடும் விமர்சனம்

இதனிடையே இயக்குநர் அமீர் தனது வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார். அதில், மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு மகளிர் தின விழா என்னும் கேவலமான அரசியல் நிகழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார். அவர் கட்சி மற்றும் யார் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், இன்று நடக்கும் தவெகவைத்தான் அவர் விமர்சித்துள்ளார் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.