TVK Vijay: துணை முதல்வர் பதவி.. 70 சீட்டு.. கூட்டணிக்கு கூப்பிட்ட விஜய் - எந்த கட்சி தெரியுமா?

3 months ago 4
ARTICLE AD

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. திமுக, அதிமுக என்ற இரு மிகப்பெரிய ஆளுமைகளுக்கு எதிராக களத்தில் குதித்திருப்பவர் நடிகர் விஜய்.

கூட்டணி அழைப்பு விடுத்த தவெக:

வரும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவாகியுள்ளது. கட்சி தொடங்கிய பிறகு பெரிதும் பரபரப்பாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது அறிக்கை, பொது மேடை என இயங்கி வருகிறார் விஜய். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மிகப்பெரிய தாக்கத்தை தமிழக அரசியலில் ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய்க்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும் தமிழக அரசியலில் தற்போதைய நிலையைப்  பொறுத்தவரையில் கூட்டணி இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே கருதப்படுகிறது. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற விஜய்யின் அறிவிப்பால் அவர் பக்கம் சில கட்சிகள் சாயும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருடன் எந்த கட்சியும் இதுவரை கூட்டணி சேரவில்லை.

காங்கிரசுடன் பேச்சுவார்த்தை:

திருமாவளவனுக்கு வெளிப்படையாக விஜய் அழைப்பு விடுத்தும் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். இந்த நிலையில், விஜய் தரப்பினர் தொடர்ந்து திமுக-வில் கூட்டணியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் காங்கிரசுக்கு தொடர் அழைப்பு விடுத்து வருகின்றனர். ஏற்கனவே இதுதொடர்பாக டெல்லியில் ராகுல்காந்தி - சோனியாகாந்தி - பிரியங்கா காந்தியிடம் தமிழக காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தியது.

70 தொகுதிகள், துணை முதல்வர் பதவி:

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் மீண்டும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதில் தவெக-வுடன் கூட்டணி சேர்ந்தால் 70 தொகுதிகள், துணை முதல்வர் பதவி அளிப்பதாக காங்கிரசுக்கு தவெக உத்தரவாதம் அளித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஒருவர் மூலமாக நடத்தப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது வரை தவெக-வின் அழைப்பிற்கு காங்கிரஸ் பிடிகொடுக்கவில்லை. அதேசமயம், தேர்தல் சமயத்தில் திமுக-வுடனான தொகுதி பங்கீட்டின்போது கடந்த முறையை காட்டிலும் அதிக தொகுதிகள் கேட்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ் எதிர்பார்த்த தொகுதிகள் எண்ணிக்கை கிடைக்காவிட்டால் தமிழக வெற்றிக் கழகத்துடனான கூட்டணி பற்றி ஆலோசிக்க தயாராக உள்ளனர். தவெக காங்கிரஸ் மட்டுமின்றி மற்ற கட்சிகளுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராகுல்காந்தியைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்:

தவெக தமிழக காங்கிரசுக்கு தூது விட்டு வரும் நிலையில், ராகுல் காந்தி நடத்தும் பாத யாத்திரையில் வரும் 27ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். ராகுல்காந்தி - சோனியாகாந்தி ஆகியோருடனான மு.க.ஸ்டாலினின் உறவு சுமூகமானதாக உள்ளது. இதனால், திமுக கூட்டணியை எளிதில் முறியடித்துவிட்டு காங்கிரஸ் வெளியில் வருமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு கூட்டணி கணக்குகள் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்க்கு பக்கபலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சீமான், விஜய்யை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். விஜய் எடுக்கும் முயற்சிகள் அவருக்கு கைகொடுக்குமா? அல்லது வேறு எந்த கட்சியாவது அவருக்கு பக்கபலமாக தோள் கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Read Entire Article