TVK Vijay: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 61 தொகுதிகளுக்கான வெற்றி தோல்வி, வெறும் 5 ஆயிரத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் அமைந்துள்ளது.

சொல்ல அடித்த விஜய்..

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்தபோது, ”2026ம் ஆண்டில் இரண்டே பேருக்கு தான் போட்டி. ஒன்று திமுக, மற்றொன்று தவெக”என தவெக தலைவர் விஜய் மீண்டும் மீண்டும் சூளுரைத்து வந்தார். அதனை உண்மை என நிரூபிக்கும் விதமாகவே தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது. தவெக வென்றுள்ள 108 இடங்களில் பெரும்பாலானவை கடந்த தேர்தலில் திமுக வென்றவையே ஆகும். இரண்டாவது இடத்தில் அதிமுக உள்ளது. இதுபோக, தனிப்பெரும்பான்மைக்கு 10 இடங்கள் குறைவாக உள்ள நிலையில், 12 இடங்களில் வெறும் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே தவெகவினர் தோல்வியுற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவிடம் இருந்து பறிக்கப்பட்ட 51 தொகுதிகள்:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். இந்நிலையில் திமுக உடன் நேரடியாக போட்டியிட்டு 51 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. அதில் சுமார் 40 தொகுதிகள் வடமாவட்டங்களில் இருந்தே கிடைத்துள்ளது. குறிப்பாக திமுகவின் கோட்டையாக கருதப்படும் தலைநகர் சென்னையில் இருந்து மட்டுமே 14 எம்.எல்.ஏக்கள் விஜயின் கட்சிக்கு கிடைத்துள்ளனர். இதுபோக அதிமுக வேட்பாளர்களை நேரடியாக 25 இடங்களில் தவெகவினர் வீழ்த்தியுள்ளனர். மேலும் காங்கிரஸ், விசிக, தேமுதிக போன்ற திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் பல இடங்களில் நேரடியாக தவெக வீழ்த்தியுள்ளது. இதனிடையே, இரண்டு பிரதான திராவிட கட்சிகளும் 122 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதன் முடிவில் 18 இடங்களில் திமுகவும், 21 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

நூலிழையில் பறிபோன மெஜாரிட்டி

தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் சில கட்சிகளின் ஆதரவை நாடும் சூழலில் விஜய் உள்ளார். ஆனால், வெறும் 2 ஆயிரத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே 12 தவெக வேட்பாளர்கள் தேர்தலில் தோல்வியுற்றுள்ளனர். ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்று இருந்தால், விஜய் ஒரு மகத்தான சாதனையை படைத்து தனிப்பெரும்பான்மையுடன் சாதனை படத்து இருப்பார். குறிப்பாக திருக்கோவிலூரில் விஜய் பரணிபாலாஜி என்பவர் வெறும் 285 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோக 5 ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே 19 தவெக வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர்.

61 தொகுதிகளில் 5000 வாக்குகளில் பறிபோன வெற்றி

தேர்தல் முடிவுகளை அலசி ஆராய்ந்ததில் வெறும் 5000 வாக்குகள் வித்தியாசத்திலேயே 61 தொகுதிகளுக்கான வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் 15 தொகுதிகளில் மட்டுமே வெற்றி தோல்விகள் உறுதியாகியுள்ளன.

வாக்கு வித்தியாசத்தில் தோல்வி

தவெக

திமுக

அதிமுக

திமுக கூட்டணி

அதிமுக கூட்டணி

1000-க்கும் குறைவான வாக்குகள்

5

3

4

1

2

1000 - 5000 வாக்குகள்

14

16

8

7

1

5000 - 15000 வாக்குகள்

30

30

19

3

1

15000 - 30000 வாக்குகள்

33

8

8

2

2

30000 - 50000 வாக்குகள்

13

2

6

1

0

50000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசம்

13

0

2

0

0