TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?

3 months ago 8
ARTICLE AD

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வந்தவர் நடிகர் விஜய். நடிகர் விஜய் கடந்த 2024ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். கட்சியைத் தொடங்கிய அவர் திரைப்படங்களில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது கடைசி படமான ஜனநாயகன் சென்சார் சர்ச்சையில் சிக்கியுள்ளது.  நீதிமன்றத்தில் ஜனநாயகன் ரிலீஸ் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

விஜய்யின் நிறைவேறாத ஆசை:

விஜய் திரைப்படங்களில் இருந்து நடிப்பதை முற்றிலும் நிறுத்திய நிலையில், திரையுலகில் அவரது மற்றொரு ஆசை கடைசி வரை நிறைவேறாமலே போய்விட்டது. விஜய் பல வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில், டைரக்ஷன் பண்ணப்போறேன் பண்ணப்போறேன்னு சொல்லிட்டு இருப்பேன். இப்பவும் அப்படித்தான். என்னைக்காவ ஒருநாள் திடீர்னு ஒரு நியூஸ் வரும் பாருங்க. கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் விஜய்னு. ஒரு ஆசை இருக்கு. பாப்போம்.

இவ்வாறு அவர் கூறியிருப்பார்.

விஜய்யின் இந்த ஆசை கடைசிவரை நிறைவேறாமலே போய்விட்டது. அவர் நடிகராகவே தனது திரைப்பயணத்தை முடித்துக் கொள்வதாக கூறி, அரசியலில் களம் கண்டுள்ளார்.

தந்தையும், மகனும் இயக்குனர்கள்:

சுமார் 15  வருடங்களுக்கு முன்பு விஜய் அளித்த பேட்டி ஒன்றில் இதை கூறியிருப்பார். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழ் சினிமாவின் மிகவும் முக்கியமான இயக்குனராக உலா வந்தவர். அவள் ஒரு பச்சைக்குழந்தை படம் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிய அவர் சட்டம் ஒரு இருட்டறை படம் மூலமாக மிகப்பெரிய இயக்குனராக அடையாளம் காணப்பட்டார். ரஜினி, விஜயகாந்த், சிரஞ்சீவி ஆகியோரை இயக்கிய அனுபவம் கொண்டவர். விஜய்யை நடிகராகவும், கதாநாயகனாகவும் திரையில் அறிமுகப்படுத்தியதும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவார்.

தந்தையைப் போல இயக்குனராக வேண்டும் என்று விஜய் ஆசைப்பட்டாலும் அவர் நடிப்பிலே முழு கவனம் செலுத்தினார். அதேபோல, தனது தாய் போல அவர் பல படங்களில் பாடியுள்ளார். விஜய் இயக்குனராக மாறாவிட்டாலும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக திரையில் அறிமுகமாகிறார். அவர் சிக்மா என்ற படத்தை இயக்கியுள்ளார்.

Read Entire Article