TVK Vijay: இபிஎஸ் சொன்ன பிரம்மாண்ட கட்சி.. அதிமுக கூட்டணியில் நடிகர் விஜய்! பாஜக-வுக்கு கல்தாவா?

5 months ago 5
ARTICLE AD

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களத்தை நோக்கி அரசியல் கட்சிகள் தங்களது நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைத்துவிட தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமர எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

எடப்பாடி சொன்ன பிரம்மாண்ட கட்சி:

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக என மிகப்பெரிய படை பட்டாளமே உள்ளனர். அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தமாக ஆகிய கட்சிகளே உள்ளன. இதில் வட தமிழகத்தில் மிகப்பெரிய செல்வாக்கு கொண்ட பாமக-வும் அன்புமணி, ராமதாஸ் ஆகியோர் சண்டையால் பிளவுபட்டு உள்ளது. பாஜக-விற்கு எதிரான மனநிலை தமிழகத்தில் உள்ளது.

இந்த சூழலில், கூட்டணியை வலுப்படுத்தினால் மட்டுமே வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி சாத்தியம் என்பதை எடப்பாடி பழனிசாமி நன்றாக அறிந்துள்ளார். நேற்று தனது சுற்றுப்பயணத்தின்போது, ஸ்டாலின் அவர்களே.. பிரம்மாண்டமான கட்சி ஒன்று எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது. நினைச்சுக்கூட பாக்க முடியாத கட்சி என்று பேசியுள்ளார்.

அதிமுக கூட்டணிக்குள் விஜய்யா?

எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சால் தமிழக அரசியல் இன்னும் சூடுபிடித்துள்ளது. அதிமுக கூட்டணிக்கு உள்ளே போகப்போகும் பிரம்மாண்ட கட்சி யார்? என்பதே தற்போது அனைவரது கேள்வியாக எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகமே அந்த கட்சி என்றே தெரிவித்து வருகின்றனர்.

நடிகர்  விஜய் கட்சி தொடங்கியது முதலே தங்களது அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார். மேலும், திமுகவையும், பாஜகவையும் மட்டுமே தனது அரசியல் களத்திலும், பேச்சிலும் விஜய் விமர்சித்து வருகிறார். அதிமுகவை விஜய் விமர்சிக்க மறுப்பது ஏன்? என்ற கேள்வி தொடக்கம் முதலே இருந்து வருகிறது.

அப்போ பாஜகவிற்கு கல்தாவா?

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி நினைத்துக்கூட பார்க்க முடியாத கட்சி என்று கூறியிருப்பதன் மூலமாக அது விஜய் என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், பாஜகவை தொடர்ந்து விமர்சிக்கும் விஜய் பாஜக இருக்கும் வரை கூட்டணிக்குள் வருவாரா? என்ற கேள்வியே அனைவர் முன்பும் எழுந்துள்ளது. அதேசமயம் ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா தொடர்ந்து பேசி வருவது பாஜக மீது அதிமுகவினர் மத்தியில் தொடர்ந்து அதிருப்தியை உண்டாக்கி வருகிறது.

இதனால், பாஜக-வை கழட்டிவிட்டு கூட்டணிக்குள் விஜய்யை கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கான பேச்சுவார்த்தையே மறைமுகமாக சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அதிமுக கூட்டணிக்குள் விஜய் வந்தாலும் முதலமைச்சர் பதவியை குறிவைத்துள்ள விஜய் அதை எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுத்தருவாரா? துணை முதலமைச்சர் பதவியை அவருக்கு எடப்பாடி பழனிசாமி தருவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வாக்கு வங்கி:

இதனால், விரைவில் பாஜக கூட்டணிக்கு கல்தா கொடுத்துவிட்டு அதிமுக கூட்டணியில் விஜய்யை எடப்பாடி பழனிசாமி கொண்டு வருவார் என்று கருதப்படுகிறது. கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள விஜய்க்கு முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்ற தலைவர்களை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் கூட்டணிக்குள் வந்தால் அவர்களின் வாக்குகள், பெண்களின் வாக்குகள் அதிமுக-விற்கு விழும் என்று எடப்பாடி பழனிசாமி கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read Entire Article