சென்னையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அவரைக் காண மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தல்

வரும் ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்னும் ஒரு வார காலம் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் விஜயின் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் களம் காண்கிறது. 233 தொகுதிகளிலும் அக்கட்சி போட்டியிடும் நிலையில் விஜய் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் சென்னை பெரம்பூர், திருச்சி மேற்கு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, காரைக்குடி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.

சென்னையில் விஜய் பரப்புரை

இந்த நிலையில் சென்னையில் விஜய் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக கடந்த வாரம் விஜய் சென்னையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்டிருந்தார். காவல்துறை சார்பில் அனுமதியளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் கொடுத்த ஒரு மணி நேரம் தங்களுக்கு போதாது என தவெகவினர் பரப்புரையை ரத்து செய்தனர். இதனால் தொண்டர்கள் வருத்தமடைந்தனர்.

மேலும் விஜய் சென்னை போன்ற பெருநகரங்களுக்குள் செல்லும்போது நிச்சயம் போக்குவரத்து நெருக்கடி, மக்கள் பாதுகாப்பில்; குறைபாடு போன்ற பிரச்னைகள் போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் விஜய் சென்னையில் பரப்புரை மேற்கொள்வாரா அல்லது வேறு எதுவும் வகையில் பிரச்சாரம் செய்வாரா என்ற கேள்வி எழுந்தது.

இப்படியான நிலையில் தான் விஜய் சென்னை தி.நகர், ஆயிரம் விளக்கு, சென்னை எழும்பூர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிகளில் இன்று பரப்புரை மேற்கொண்டார். அவரைக் காண வழிநெடுகிலும் ரசிகர்கள், பொதுமக்கள், தவெக தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பெரும் வரவேற்பு அளித்தனர்.