Avatar 3 Collection: அவதார் படம் மேல் பிரம்மிப்பு குறைந்துவிட்டதா ? 3 நாள் வசூல் இவ்வளவுதானா

2 hours ago 1
ARTICLE AD

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில்  அவதார் படவரிசையில் 3 ஆவது பாகமாக உருவாகியுள்ள படம்  ' அவதார் ஃபயர் அண்ட் ஆஷ்'. இப்படம்  கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியது. அவதார் படத்தின் 3 நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு கிடைத்திருந்தாலும் முந்தைய பாகங்களைக் காட்டிலும் இப்படம் குறைவான வசூலையே ஈட்டியுள்ளது

ரசிகர்களை கவர்ந்ததா அவதார் 3 ?

2009 ஆம் ஆண்டு அவதார் முதல் பாகம் வெளியானபோது உலகம் முழுவதிலும் உள்ள சினிமா ரசிகர்கள் இப்படத்தை வியந்து பாராட்டினார்கள். பண்டோரா என்கிற கற்பனை கதையுலகத்திற்குள் ஜேம்ஸ் கேமரூன் பார்வையாளர்களை அழைத்துச் சென்று அதில் பல ஆச்சரியங்களை நிகழ்ச்சி காட்டினார். அதே போல் இப்படத்தை உருவாக்க பயன்படுத்தபட்ட மோஷன் கேப்ச்சர்  தொழிலநுட்பம் , தத்ரூபமான வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் பெரியளவில் பேசப்பட்டன. கிட்டதட்ட 13 ஆண்டுகளுக்குப் பின் இப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகி பெரும் வசூல் ஈட்டியது. ஆனால் இந்த இரண்டு பாகங்களைக் காட்டிலும் மூன்றாவது பாகமான அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் படத்தின் மேல் ரசிகர்கள் பெரியளவில் ஈடுபாடு காட்டவில்லை. காட்சி அமைப்பு ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் இப்படம் இன்னும் நம்மை ஆச்சரியப்படுத்தவே செய்கிறது என்றாலும் கதை ரீதியாக புதிய அனுபவம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அவதார் 3  வசூல்

அவதார் திரைப்படம் முதல் வாரத்தில் முதல் 3 நாட்களில் உலகளவில் 345 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. அமெரிக்கா தவிர்த்து சீனாவில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சீனாவில் மட்டும் இப்படம் 57 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. இந்தியாவில் இப்படம் 3 நாட்களில் ரூ 66 கோடி வரை வசூல் செய்துள்ளது.  அவதார் முந்தைய பாகங்களின் வசூலை ஒப்பிடும் போது இது கொஞ்சம் குறைவே. அவதார் 2 திரைப்படம் முதல் வாரத்தில் உலகளவில் 441 மில்லியன் டாலர் வசூல் செய்தது. இதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு டிஸ்னி வெளியிட்ட ஜூடோப்பிய்யா 2 ஆம் பாகம் முதல் வாரத்தில் 560 மில்லியன் டாலர் வசூல் செய்த நிலையில் அவதார் 3 இதில் பாதி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதனால் அவதார் படங்களின் மேல் ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்துள்ளதா என்கிற கேள்வி எழுந்துள்ளது

அவதார் 4 , 5

அவதார் பட வரிசையில் இன்னும் இரு பாகங்கள் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளன. அவதார் 4 ஆம் பாகம் 2029 ஆம் ஆண்டும், அவதார் 5 ஆம் பாகம் 2031 ஆம் ஆண்டும் வெளியாக உள்ளன. ஆனால் அவதார் 3 ஆம் பாகத்திற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே அடுத்தடுத்த பாகங்களை இயக்குவதா வேண்டாமா என ஜேம்ஸ் கேமரூன் அண்மையில் தெரிவித்திருந்தார். ஒட்டுமொத்தமாக அவதார் படத்தின் வசூலைப் பொறுத்து அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகுமா இல்லையா என்பது முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கலாம் .

Read Entire Article