TVK Vijay Campaign: வில்லிவாக்கத்தில் விஜய் பிரச்சாரம் திடீர் ரத்து; இதுதான் காரணம்- வெளியான தகவல்

2 months ago 10
ARTICLE AD

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்ட நிலையில், தவெக தலைவர் விஜயின் வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புக் குறைபாடு காரணமாக இந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்த விஜய்,  தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.பாபு சார்பாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று தவெகவினர் குற்றம் சாட்டினர்.

என்ன காரணம்?

இதற்கிடையே பாதுகாப்பு குறைபாடு காரணமாக தவெக தலைவர் விஜய், வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் செய்யாமலேயே வீட்டுக்குத் திரும்புவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

வில்லிவாக்கம் தொகுதியில் தவெக தேர்தல் வியூக மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தவெக வேட்பாளராகக் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தவெக வெற்றிக் கழகம் கூறும்போது, பிரச்சாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும் ஒரு பிரச்சார இடத்தில் இருந்து இன்னொரு பிரச்சார இடத்திற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் செல்லும் வழியில், காவல்துறை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைப்படுத்துதல் கொஞ்சம்கூட இல்லாததால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களது பிரச்சார வாகனம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல இயலாத பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்படுகிறதா? என்கிற ஐயம் ஏற்படுகிறது.

சென்னை மாநகர காவல்துறையின் இத்தகைய, ஒருதலைபட்சமான நடவடிக்கைகளின் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதலை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு செயல்படாத அதிகாரிகள் மீது துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

அத்தோடு தமிழக வெற்றிக் கழகத் தலைவருக்கு அனுமதி மறுத்துவிட்டு திமுக தலைவர்ஸ்டாலினுக்கு மட்டும் ஒருதலைபட்சமாக திறந்தவெளி வாகன பிரசாரத்திற்கு அனுமதி அளித்திருப்பது ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் செயலாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் பிரசார செயல்பாடுகள் சார்ந்த அரசின் பொறுப்புகளை தட்டிக்கழித்து, முறையாக பிரசாரங்களை மேற்கொள்ளும்சூழலை முடக்க கபடநாடக திமுக அரசுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article