TVK VIJAY Alliance: ரங்கசாமியோடு கூட்டணிக்கு பிளான் போடும் விஜய்.! நடக்கவே நடக்காது -அடித்து சொல்லும் நமச்சிவாயம்

1 day ago 2
ARTICLE AD

புதுச்சேரியில் விஜய்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், மக்களை சந்திக்கும் வகையில் புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பேசிய அவர், புதுச்சேரியை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை, பலமுறை சட்டசபையில் தீர்மானம் போட்டு அனுப்பியும் கண்டுகொள்ளவில்லை.புதுச்சேரி மாநில அந்தஸ்த்துக்காக மட்டும் 16வது தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. 5 மில்கள் மூடப்பட்டுள்ளது.தொழிற்சாலைகள் தொடங்க ஒரு துரும்பை கூட எடுக்கவில்லை. வேலைவாய்ப்பு உருவாக்கவில்லை, ஐடி கம்பெனி தொடங்கவில்லை. ரேஷன் கடைகளே இல்லாத மாநிலமாக புதுச்சேரி இருப்பதாக விமர்சித்திருந்தார்.

புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்

இதற்கு புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதிலடி கொடுத்துள்ளார். ABP நாடுக்கு சிறப்பு பேட்டியளித்த அவர், புதுச்சேரியில் எல்லா திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயக அரசு வந்த பிறகு தான் எல்லா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. நாராயணசாமி முதலமைச்சராக இருந்தவரை எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. தற்போது தான் முதியோர் பென்சன், புதிய ஊதிய திட்டம், அரசு ஊழியர்களுக்கு சம்பளம், 7வது ஊதிய குழு, உட்கட்டமைப்பு வசதி, ரேஷன் கடைகள் மூலம் உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

புதுச்சேரியில் நியாயவிலைக்கடைகள் இல்லையென விஜய் பேச்சுக்கு பதில் அளித்த அவர், கடந்த 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் பொருட்களுக்கு பதிலாக பணம் கொடுக்கப்பட்டது. இந்த திட்டம் நிறுத்தப்பட்டு இலவசமாக மாதம் 20 கிலோ ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. விஜய் தவறாக பேசியிருக்கார். வரலாறு தெரியாமல் பேசியிருக்கிறார்.
விஜய்க்கு  சொல்லிக்கொடுத்தவங்க சரியாக சொல்வில்லை எனவும் விமர்சித்தார்.

விஜய் பொய் சொல்லியுள்ளாரா.?

ஆட்சியில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியை விமர்சிக்காமல் கூட்டணியில் உள்ள பாஜகவை விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ரங்கசாமியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக பாராட்டி பேசியிருக்கார். இதற்காக மத்திய அரசு விமர்சித்திருகிறார். புதுவை மாநிலத்தில் 2026 தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அந்த கூட்டணியில் ரங்கசாமி நிச்சயமாக இடம்பெறுவார் என தெரிவித்தார். புதுச்சேரியில் ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளதா.? இல்லையா என்பதை மக்களுக்கு தெரியும். எனவே விஜய் பொய் சொல்லியுள்ளாரா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என கூறினார்.

புதுச்சேரியில் தவெக ஆட்சி அமைக்கும் என புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பேசியது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில், எல்லா கட்சியும் ஆட்சி அமைக்கும் என்று சொல்லி தான் தேர்தலை சந்திக்கிறது. சுயேட்சை வேட்பாளர் கூட ஆட்சிக்கு வருவோம் என நம்பிக்கையில் பேசுகிறார்கள். எனவே மக்கள் தான் இதனை முடிவு செய்வார்கள் என தெரிவித்தார்.

Read Entire Article