TVK Minister Keerthana: அன்று மு.க.ஸ்டாலினிடம் வேலை.. இன்று தவெக அமைச்சர்.. கீர்த்தனாவின் கதை தெரியுமா?

3 weeks ago 4
ARTICLE AD

தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் ஆலோசகர் குழுவில் நான் வேலைப் பார்த்துள்ளேன் என அமைச்சர் கீர்த்தனா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், 5 கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாட்டில் ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். அவரது தலைமையின் கீழ் முதற்கட்டமாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் இளம் எம்.எல்.ஏ.வான கீர்த்தனாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நன்றி சிவகாசி மக்களே!
என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை, சிறந்த பணிகளின் மூலம் நிச்சயமாக நிறைவேற்றுவேன். விஜய் அண்ணா கூறியது போல, “வளர்ச்சிக்கான காலம் இப்போது தொடங்கியுள்ளது!”#Sivakasi #Assembly #TamilNadu #Oath #TVK pic.twitter.com/XxpCG0oKlP
— Virudhai Magal Keerthana (@Keerthana4VNR) May 11, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதியில் தான் கீர்த்தனா போட்டியிட்டார். அங்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி களம் கண்டார். ஆனால் ராஜேந்திர பாலாஜியை மூன்றாம் இடம் தள்ளி, திமுக வேட்பாளரை வீழ்த்தி கீர்த்தனா வெற்றி பெற்றார். தற்போது அமைச்சராகவும் மாறியுள்ளதால் சிவகாசி தொகுதி அதிக கவனம் பெற்றுள்ளது. இதனிடையே தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் கீர்த்தனா ஊடகம் ஒன்றில் நேர்காணல் அளித்தார். அதில் தனது அரசியல் பயணம் பற்றி பேசியுள்ளார்.

அதாவது, “உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் இந்த வாய்ப்பு எளிமையான பின்னணியில் இருப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் கிடைக்குமா என்றால் இல்லை. அப்படியான வாய்ப்பை தவெக தலைவர் விஜய் கொடுத்துள்ளார். அதன்பிறகு என்னை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். நான் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் நம்பினார்கள். ஜெயித்த பிறகு அதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புணர்வு அதிகரித்துள்ளது. எனக்கு சிறு வயதில் இருந்தே அரசியலில் ஒரு ஆர்வம் இருந்தது. 3 முதலமைச்சர்களுடன் வேலை பார்த்துள்ளேன். தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜியுடன் வேலை செய்துள்ளேன்.

அந்த ஒரு பயணம் தான் என்னை இங்கு கொண்டு வந்திருக்கிறது. பெண்கள் என்றால் பேசக்கூடாது என்ற கட்டுப்பாடு எப்போதும் இருக்கும். அதில் இருந்து பெண்களை வெளிக்கொண்டு வர நான் என்னை நிரூபிக்க வேண்டிய சூழல் இருந்தது. நான் படித்தது எல்லாம் தமிழ் மீடியம் தான். வெளியில் வந்து நிறைய விஷயம் கற்றுக்கொண்டு வீட்டில் நிரூபிக்க போய் தான் நம்பினார்கள்.

விஜய் எப்போதும் ஒரு விஷயம் சொல்லுவார். மக்களுக்கு செய்ய வேண்டிய நோக்கம் இருந்தாலே போதும். உங்கள் செயல்பாட்டை நிச்சயம் மக்கள் நம்புவார்கள். அதுதான் இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிறது. எங்கள் மீது சுமத்தப்படும் சர்ச்சைகளுக்கு என்றைக்காவது நாங்கள் பதில் சொல்லவே மாட்டோம். எங்கள் இலக்கு மக்களுக்கு நல்லது செய்வது மட்டும் தான். அதை மக்களும் புரிந்து கொண்டுள்ளார்கள்” என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

Read Entire Article