<p>தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது இதுவரை 2.5 லட்சம் தொண்டர்கள் மாநாட்டிற்கு வந்திருப்பதாக செய்தி ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளதால் திட்டமிட்ட நேரத்துக்கு முன்கூட்டியே மாநாடு தொடங்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். அதற்கேற்ப ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் மேடைக்கு வந்துள்ளார்கள். </p>
<p>மாநாட்டு திடலை சுற்றிலும் 200க்கும் மேற்பட்ட உயர் மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தொண்டர்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் வசதி அமைக்கப்பட்டுள்ளது.100க்கும் மேற்பட்ட நடமாடும் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. கடும் வெயில் காரணமாக தொண்டர்கள் சிலர் இருக்கைகளை நிழற்கூடை போல் தலையில் பிடித்துக்காெண்டுள்ளனர். அதனோடு வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் 10 தொண்டர்கள் மாநாட்டு திடலில் மயங்கி விழுந்தனர். இதில், 9 பேர் வளையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், ஒருவர் மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார். ட</p>
<p>மதுரையில் நடைபெறும் 2ஆவது மாநாட்டிற்காக வந்திருக்கும் தொண்டர்கள் அதிமுக, திமுகவிற்கு மாற்று கட்சி தவெக என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். தவெக தலைவர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> இன்று முன்பு ஆண்ட கட்சி, தற்போது ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிக்க உள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர். </p>