புதிய விதிமுறைகள் வகுக்கும் வரை அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்த அனுமதி கிடையாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவெக கூட்ட நெரிசல்:

கரூரில் கடந்த மாதம் நடந்த தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்ப்பட்ட நெரிசலில் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது, மேலும் அரசியல் கட்சிகள் நடத்தும் ரோட் ஷோ மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரியை வழக்கை விசாரிக்க இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுகள் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மேலும் தவெக சார்பில் விஜய் பரப்புரைக்கு மட்டும் அதிக நிபந்தனைகள் விதிப்பதாக தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது.

ரோட் ஷோவுக்கு தடை

வழக்கை விசாரித்த நீதிபதிகள் புதிய விதிமுறைகள் வகுக்கும் வரை எந்த அரசியல் கட்சி நடத்தும் ரோட் ஷா நடத்த அனுமதி இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கான கருத்துகளை பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டு விரைவில் விதிமுறைகள் வகுக்கப்படும் என வழக்கு விசாரணையின்போது உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், 10 நாட்களில் அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை விரைவாக வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

ஜாமீன் மனு தள்ளுபடி:

மேலும் இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீதான வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில், முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக அவர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, தலைமை நீதிபதி அமர்வு இதற்கு அனுமதி அளித்து, அவருடைய முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.