தமிழகத்தில் ஆட்சியை பிடித்த தவெக

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனையடுத்து திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கூட்டணியை முறித்து கொண்டு தவெக கூட்டணியில் இணைந்தது. அடுத்தாக விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தது. இதனையடுத்து இந்த கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். அப்போது தவெகவை சேர்ந்த 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

அமைச்சரவை விரிவாக்கம்

அதே நேரம் தவெக அமைச்சரவையில் தங்களுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தங்கள் கட்சி நிர்வாகிகளோடு ஆலோசித்து தெரிவிப்பதாக கூறியது. அந்த வகையில் நேற்றைய தினம் 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் கட்சி தவெக அமைச்சரவையில் இடம்பெறவில்லை. இதனையடுத்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக அமைச்சரவையில் இடம்பெறுவது என முடிவு செய்யப்பட்டது.

அமைச்சரவையில் விசிக, முஸ்லிம் லீக்

அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக திண்டிவனம் தொகுதியில் வெற்றி பெற்ற வன்னி அரசும், பாபநாசம் தொகுதியில் வெற்றி பெற்ற ஷாஜகானும் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என அந்த கட்சிகள் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் இந்த இரண்டு பேரும் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அமைச்சர்களாக இரண்டு பேரும் பதவியேற்ற பிறகு இருவருக்குமான அமைச்சரவை ஒதுக்கப்படவுள்ளது. அந்த வகையில் வன்னி அரசுக்கு ஆதி திராவிடர் நலத்துறையும், ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத்துறையும் ஒதுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.