TVK Aadhav Arjuna: ஆதவ் அர்ஜூனா வேட்புமனு நிறுத்தி வைப்பு.. சிக்கிலில் தவெக.. என்னாச்சு?

1 month ago 8
ARTICLE AD
<p>2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவில் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <p>ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்த சொத்து தொடர்பான பிரமாண பத்திரத்தில் சில தகவல்கள் இடம்பெறவில்லை என சுயேட்சை வேட்பாளர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவரது வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன.&nbsp;</p> <p>இந்த நிலையில் கடந்த மார்ச் 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. நடுவில் அரசு விடுமுறை வந்த நிலையிலும் மீதமுள்ள நாட்களில் அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக்குழுவின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுவதற்காக மார்ச் 30ம் தேதி முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்தார்.&nbsp;</p>
Read Entire Article