TTF Vasan: ரசிகர்களே! ஐ.பி.எல். இரண்டாவது போஸ்டர் ரிலீஸ் - டி.டி.எஃப். வாசன் லுக் எப்படி?

1 year ago 7
ARTICLE AD

இன்று நாளுக்கு நாள் யூடியூப் மோகம் அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக பல யூடியூபர்களும் முளைத்து கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த டிடிஎஃப் வாசன் விலையுயர்ந்த பைக்குகளில் சாகசம் செய்வதை யூடியூப்பில் வீடியோவாக போஸ்ட் செய்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவருக்கு மாநிலம் எங்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

மஞ்சள் வீரன் நாயகன்:

எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறாரோ அதே அளவுக்கு சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது. அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளாகவே மிகவும் பிரபலமானவராக தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறார். சமீபத்தில் கூட செல்ஃபோன் பேசியபடி பைக்கை வேகமாக இயக்கியதற்காக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.

இந்நிலையில் தான் வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு பெற்ற டிடிஎஃப் வாசன் தற்போது 'மஞ்சள் வீரன்' என்ற படத்தின் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். ஏற்கனவே 'திரு.வி.க பூங்கா' என்ற படத்தை இயக்கிய செல்வம் தான் 'மஞ்சள் வீரன்' படத்தையும் இயக்குகிறார். சுமார் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. கடந்த ஆண்டு வெளியான அப்படத்தின் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தும் பல போக்குவரத்து விதிமீறலுக்காக சர்ச்சையில் சிக்கி வருகிறார். இது தொடர்ந்து கொண்டே தான் வருகிறது. சர்ச்சைகளுக்கு இடையேயும் டிடிஎஃப் வாசன் படு பிஸியாக இருக்கிறார். அவரின் அடுத்த படம் குறித்த அப்டேட் ஒன்று சமீபத்தில் வெளியானது. தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர் ஆடுகளம் கிஷோர், நடிகை அபிராமி உடன் இணைந்து டிடிஎஃப் வாசன் நடிக்க இருக்கும் படத்துக்கு ஐபிஎல் (IPL) என பெயரிடப்பட்டுள்ளது.

ராதா ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கருணாகரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு விநாயகமூர்த்தி இசையமைக்க உள்ளார். பான் இந்தியன் படமாக உலகெங்கிலும் வெளியாக உள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டாவது போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. திறமையான நடிப்புக்கு பெயர் போன நடிகர் கிஷோர் இப்படத்தில் நடிக்க உள்ளதால் படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. மேலும் இது கிரிக்கெட் சார்ந்த திரைப்படமா? என்பது கூடிய விரைவில் தெரியவரும்.

வெள்ளித்திரை என்ட்ரி, யூடியூப் பிரபலம் இப்படி பல வகையிலும் மக்கள் மத்தியில் பிரபலமானவராக திகழும் டிடிஎஃப் வாசன் அடுத்த டார்கெட் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக என்ட்ரி கொடுக்க உள்ளார் என கூறப்படுகிறது.

Read Entire Article