Trump vs Youtube: ட்ரம்பிற்காக கோடிகளை கொடுக்கும் யூடியூப்... காரணம் தெரிஞ்சா ஆடிப்போய்டுவீங்க!

2 months ago 4
ARTICLE AD

கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க கேபிடல் கலவரத்தைத் தொடர்ந்து தனது யூடியூப் கணக்கு இடைநிறுத்தப்பட்டது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்த வழக்கில் யூடியூப் 217 கோடியை இழப்பீடாக வழங்க முடிவு செய்திருக்கிறது.

யூடியூப் மீது ட்ரம்ப் வழக்கு:

கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வி அடைந்ததை தொடர்ந்து வாஷிங்டன் மாநகரில் உள்ள அமெரிக்க தலைமையகத்தில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் மிகப்பெரிய அளவில் கூடி கலவரத்தில் ஈடுபட்டனர்.  அந்த சமயம் ட்ரம்ப்பின் சமூக வலைதள பதிவுகள் தங்கள் பாதுகாப்பு தணிக்கையை மீறியதாக மெட்டா, யூடியூப் மற்றும் எக்ஸ் பக்கங்கள் ட்ரம்ப்பின் வலைதள பக்கங்களை இடை நீக்கம் செய்தன.

அந்த நேரத்தில், வன்முறை சாத்தியம் குறித்த கவலைகளை யூடியூப் மேற்கோள் காட்டியது மற்றும் டிரம்ப் பதிவேற்றிய ஒரு வீடியோ வன்முறையைத் தூண்டுவதன் மூலம் அதன் கொள்கைகளை மீறுவதாகக் குறிப்பிட்டது.  இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த ட்ரம்ப் உடனடியாகவே  Truth Social  என்ற பக்கத்தை உருவாக்கினார். அதேபோல் சம்மந்தப்பட்ட அந்த நிறுவனங்கள் மீது வழக்கும் தொடர்ந்தார்.

ட்ரம்பிற்கு கோடிக்கணக்கில் இழப்பீடு:

கடந்த 2023 ஆம் ஆண்டு அவரது கணக்கை மீட்டெடுத்தது, டிரம்பின் புதிய உள்ளடக்கத்தைப் பதிவேற்றும் திறனை மீட்டெடுத்தது. இச்சூழலில் தான் இந்த வழக்கை தீர்ப்பதற்கு யூடியூப் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் 24.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 217 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க யூடியூப் முடிவு செய்துள்ளது.

இதில், 22 மில்லியன் அமெரிக்க டாலார் நேஷனல் மாலுக்கான அறக்கட்டளைக்கு செல்லும். மீதமுள்ள 2.4 மில்லியன் அமெரிக்க டாலர் கன்சர்வேடிவ் யூனியன் உள்ளிட்ட அமைப்புகளுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.

Read Entire Article