Trump On Iran: கொடூரமான ஈரான் அச்சுறுத்தலை அழித்து ஒழிப்போம் என பேசி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை:

அணு ஆயுத சோதனைகள் தொடர்பாக ஈரானுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்த அமெரிக்கா, இஸ்ரேலுடன் சேர்ந்து தலைநகர் தெஹ்ரானில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆயுதங்களை கைவிட்டு சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள். கொடூரமான ஈரான் அச்சுறுத்தலை அழித்து ஒழிப்போம். அவர்களை ஏவுகணைகளையும், ஏவுகணை தொழிற்சாலைகளையும் தரைமட்டமாக்குவோம்” என ட்ரம்ப் பேசியுள்ளார்.

pic.twitter.com/BZuJDudLej

— Donald J. Trump (@realDonaldTrump) February 28, 2026