Trump Iran War: ஈரானுக்கு 48 மணி நேர கெடு.. அடித்து நொறுக்குவோம் என ட்ரம்ப் எச்சரிக்கை!

3 weeks ago 5
ARTICLE AD

ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறக்காவிட்டால் அழிவுகளை சந்திக்க நேரிடும் என ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் பெரும் போர் பதற்றம் சூழ்ந்தது. கொத்து கொத்தாக மக்கள் உயிரிழந்து வருகின்றனர். போரை நிறுத்தச் சொல்லி உலக நாடுகள் வலியுறுத்திய நிலையில் ட்ரம்ப் பிடிவாதமாக மறுத்து வருகிறார். ஈரானும் தங்கள் பக்கம் நேர்ந்த இழப்புகளுக்கு பதிலடி கொடுத்தே தீருவோம் எனவும் சூளூரைத்திருக்கிறது.

இதற்கிடையில் ஆசிய நாடுகளுக்கு எரிபொருள் கொண்டு செல்லும் நீர்வழி பாதையான  ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் மிகப்பெரிய அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. பிரதமர் மோடி ஈரான் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்திய எரிபொருள் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி ஈரானுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

PRESIDENT TRUMP: 🇺🇸🇮🇷 The United States has blown Iran off of the map… they want to make a deal. I don’t! pic.twitter.com/cohcSVxc0e
— Donald J Trump Posts TruthSocial (@TruthTrumpPost) March 21, 2026

இதுதொடர்பாக அவர் ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்றிலிருந்து சரியாக 48 மணி நேரத்திற்குள், ஈரான் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறக்காவிட்டால் , அமெரிக்கா அவர்களின் பல்வேறு மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கி அழித்துவிடும்; முதலில் மிகப்பெரிய நிலையத்திலிருந்து தொடங்குவோம்! இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி” என தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த என்ன நடக்கப்போகிறது என தெரியாமல் உலக நாடுகள் விழிபிதுங்கியுள்ளது.

உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் விநியோகத்தைக் கொண்டுசெல்லும் முக்கியப் போக்குவரத்துப் பகுதியாக ஹோர்முஸ் ஜலசந்தி உள்ளது. மூன்று வார கால மோதலுக்குப் பிறகு இராணுவ நடவடிக்கைகளைக் குறைப்பது குறித்த அவரது முந்தைய ஆலோசனையைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மார்ச் 21ம் தேதி ஈரானின் நடன்ஸ் நகரில் உள்ள தனது அணுசக்தி தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக இஸ்ரேலில் அணுசக்தி நிலையம் அமைந்துள்ள டிமோனா மற்றும் அராத் ஆகிய நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அணுமின் உலையில் இந்த தாக்குதலால் எந்தவித கதிர்வீச்சுக் கசிவும் ஏற்படவில்லை என ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.

Read Entire Article