திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள விழுப்புரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் புதுச்சேரி - விழுப்புரம் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விழுப்புரம் ரயில் சேவைகளில் மாற்றம்

இதுதொடர்பாக தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் சார்பில் பயணிகளுக்கு வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் ரயில் சேவை ரத்து தொடர்பான விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

விழுப்புரம் - புதுச்சேரி

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு தினமும் காலை 5.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (மெமு - MEMU) வண்டி எண் : 66063 வருகிற ஜூலை 24ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் 31ஆம் தேதி (அடுத்த வியாழக்கிழமை) வரை, (ஜூலை 30 - புதன்கிழமை) நீங்கலாக ரத்து செய்யப்படுகிறது.

புதுச்சேரி - விழுப்புரம்

இதே போல, மறுமார்க்கமாக புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு தினமும் காலை 8.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (மெமு - MEMU) வண்டி எண் :66064 வருகிற ஜூலை 24ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் 31ஆம் தேதி (அடுத்த வியாழக்கிழமை) வரை, (ஜூலை 30 - புதன்கிழமை) நீங்கலாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை - புதுச்சேரி

சென்னை எழும்பூரில் இருந்து வருகிற ஜூலை 27ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரிக்கு வரும் மெமு மின்சார ரயில் (வண்டி எண் : 66051) 10 நிமிடங்கள் தாமதமாக புதுச்சேரியை வந்தடையும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.